என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு இன்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.
    X
    கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு இன்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    ஈரோடு கோட்டை மாரியம்மன் கோவில் குண்டம் விழா தொடங்கியது

    ஈரோடு கோட்டை மாரியம்மன் கோவில் குண்டம் விழா நேற்று பூச்சாட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    ஈரோடு கோட்டை மாரியம்மன் கோவில் குண்டம் விழா நேற்று பூச்சாட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது.

    விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் மற்றும் பால் குடங்கள் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    மதியம் அபிஷேகமும் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நாளை (புதன்கிழமை) அக்னி கபாலம் எடுத்து திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    வெள்ளிக்கிழமை காலை முக்கிய விழாவான குண்டம் விழா நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிக்கிறார்கள். அன்றும் பொங்கல் வைத்து வழிபாடும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×