என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
ஈரோட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார். மனைவி கண் முன்னே கணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, சாஸ்திரி நகர், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 55). இவரது மனைவி ரங்கநாயகி.
மாதேஸ்வரன் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரங்கநாயகியும் கணவருடன் சேர்ந்து கட்டிட வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பாரதி நகர், மாருதி கார்டன், 3-வது வீதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் மாதேஸ்வரனும், ரங்கநாயகியும் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று வழக்கம் போல் வீட்டின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். டீ குடிப்பதற்காக மொட்டை மாடியில் இருந்து மதேஸ்வரன், அவரது மனைவி ரங்கநாயகியும் உடன் வேலை பார்பவர்களும் கீழே இறங்கி வந்தனர்.
அப்போது வந்து கொண்டிருந்த மதேஸ்வரன் எதிர்பாராத வகையில் திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். அவரது மனைவி ரங்கநாயகி இதை பார்த்து கதறி அழுதார்.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மதேஸ்வரனை கொண்டு சென்றனர். மதேஸ்வரனை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மனைவி கண் முன்னே கணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story