என் மலர்

  செய்திகள்

  ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து வாங்க மறுக்கும் வியாபாரிகள்
  X

  ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து வாங்க மறுக்கும் வியாபாரிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து வாங்க மறுக்கும் வியாபாரிகளால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

  ஈரோடு:

  கடந்த நவம்பர் மாதம், 8-ந்தேதி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

  இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களிடம் இருந்து பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும் புதிய ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கும் படாதபாடு பட்டார்கள். இப்போதுதான் ஒரளவு நிலைமை சீரடைந்து உள்ளது.

  இந்த நிலையில் இப்போது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்தி கிளம்பி உள்ளது.

  இதனால் பஸ்கள், மற்றும் வியாபாரிகள் யாரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தனர். இது பற்றி ரிசர்வ் வங்கி பழைய 10 ரூபாய் நாணயங்கள்செல்லும் என்று அறிவித்தது.

  ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரும் 10 ரூபாய்நாணயம் செல்லும் . எனவே வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். 10 ரூபாயை யாராவது வாங்க மறுத்தால் அது பற்றி புகார் செய்யலாம் என்று கூறினார்.

  புகார் செய்வதற்கான கலெக்டர் அலுவலக போன் எண், வாட்ஸ்அப் எண் போன்றவற்றையும் அவர் வெளியிட்டார்.

  ஆனாலும் வியாபாரிகள் மற்றும் ஒரு சில பஸ்களில் இப்போதும் கூட தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.

  இதை தொடர்ந்து போக..போக.. 10 ரூபாய் காசுகள் செல்லாமல் போய் விடுமோ என்று பயந்த பொதுமக்கள் தாங்கள் உண்டியல்களில் சேமித்து வைத்திருந்த காசுகளை இப்போது வெளியில் மாற்றி வருகிறார்கள்.

  இதனால் இப்போது ஏராளமான 10 ரூபாய் காசுகள் புழக்கததில் வந்து உள்ளன.

  இந்த காசுகளை டீக்கடைகள் மளிகை கடைகளில் வாங்க மறுக்கிறார்கள். டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட இந்த காசுகளை வாங்க மறுப்பதாக குடிமகன்கள் கூறுகிறார்கள்.

  ஒரு சில பஸ்களில் கண்டக்டர்கள் எல்லோருமே 10 ரூபாய் காசுகளை கொடுத்தால் நாங்கள் எப்படி மாற்றுவது என்று புலம்பிய படி வாங்கி கொள்கிறார்கள்.

  வேறு சில கண்டக்டர்களோ இந்த 10 ரூபாய் காசுகளை வாங்க மறுக்கிறார்கள்.

  இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகிறார்கள்.

  ஒரு சில கடைகளில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறி உள்ளாரே.. என பொதுமக்கள் கேட்டால் அந்த கடைகாரர்கள் ‘‘கலெக்டர் என்ன மோடியே வந்து 10 ரூபாய் கொடுத்தாலும் வாங்க மாட்டோம்’’ என்று அதிரடியாக கூறியதாக மக்கள் வேதனையுடன் கூறினர்.

  இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

  Next Story
  ×