என் மலர்

  செய்திகள்

  பங்களாபுதூர் அருகே வறுமை காரணமாக இளம்பெண் தற்கொலை
  X

  பங்களாபுதூர் அருகே வறுமை காரணமாக இளம்பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பங்களாபுதூர் அருகே வறுமை காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  டி.என்.பாளையம்:

  பங்களாபுதூர் அருகே உள்ள ஏழுர் மேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன், இவரது மனைவிஜெசிந்தா விண்ணரசி (வயது 28).

  இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு மகா தர்ஷினி (8), வித்யா ஸ்ரீ (6) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

  சரவணன் சத்தியமங்கலத்தில் இரு சக்கரம் வாகனம் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இதில் போதிய வருமானம் இல்லாததால் குடும்ப செலவுக்கு சிரமப்பட்டு வந்தனர்.

  எனவே வறுமை காரணமாக குழந்தைகளை சாயாக கவனிக்க முடிய வில்லையே என்று ஜெசிந்தா விண்ணரசி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

  இதனால் வாழ்க்கையில் மனம் உடைந்த அவர் தண்ணீரில் சாணிப் பவுடரை (வி‌ஷம்) கலந்து குடித்து விட்டார். மயக்கமான அவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×