என் மலர்tooltip icon

    ஈரோடு

    தாளவாடி மாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் விழாவில் கோவில் பூசாரி ஒருவர் மட்டும் தான் குண்டம் இறங்கி தீ மிதிப்பார்.
    ஈரோடு மாவட்டம் கர்நாடக மாநில எல்லையை யொட்டி உள்ள தாளவாடி யில் புகழ்மிக்க மாரியம்மன் கோவில் குண்டம் விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடக்கும்.

    இந்த ஆண்டு குண்டம் விழா தொடங்கி நடந்து வந்தது. 14-ந் தேதி கோவிலில் இருந்து மேள வாத்யங்களுடன் ஆற்றுக்கு சென்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 15-ந் தேதி அபிஷேக பூஜைகள் இரவு 9 மணிக்கு அலங்காரத்துடன் அம்மன் மேளதாளவாத் தியங்களுடன் திருவீதி உலா வந்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் குண்டம் விழா நடந்தது. இந்த விழாவில் கோவில் பூசாரி ஒருவர் மட்டும் தான் குண்டம் இறங்கி தீ மிதிப்பார்.

    அதே போல அவர் குண்டம் இறங்கியதும் கூடியிருந்த பக்தர்கள் அம்மா தாயே... மாரியம்மா... என்று பக்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். கோவில் அருகே முஸ்லிம்களின் பள்ளிவாசல் உள்ளது. மாரியம்மன் கோவில் குண்டம் விழாவுக்கு முஸ்லிம்களும் உறுதுணையாக இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.

    விழாவில் தாளவாடி சத்தியமங்கலம், ஆசனூர் மற்றும் சுற்றுவட்டார மலைப் பகுதி மக்களும் ஏராளமான கர்நாடக மாநில பக்தர்களும் கலந்து கொண்டனர். குண்டம் விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    அரச்சலூர் அருகே கல்குவாரியில் அழுகிய நிலையில் 60 வயது ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே உள்ளது கொல்லன் வலசு. இங்குள்ள தனியார் கல் குவாரி பகுதியில் சுமார் 55 வயது முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் கிடந்தது. பிணம் கடந்த 4 நாட்களாக கிடப்பதாக தெரிகிறது. இதனால் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் அரைக்கால் டவுசரும், மெரூன் கலர் சட்டையும் அணிந்திருந்தார்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இங்கு வந்து இறந்து கிடந்தார்? என்று தெரியவில்லை. இது தொர்டர்பாக அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடைக்கம் செய்யப்படும் என தெரிகிறது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் தண்டவாளத்தை முதியவர் கடக்க முயன்ற போது ரெயில் மோதி 2 கால்களும் துண்டானது.
    ஈரோடு:

    ரெயில் தண்டவாளத்தை சிலர் கடந்து செல்கிறார்கள். இந்த நேரத்தில் அந்த வழியாக வரும் ரெயில் அவர்கள் மீது மோதி விடுகிறது.

    இதனால் பலர் உயிரிழந்து வருகிறார்கள். ஏராளமான பேர் படுகாயம் அடைகிறார்கள்.

    எனவே தண்டவாளத்தை கடந்து சொல்ல வேண்டாம் என்று ஈரோடு ரெயில்வே போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் துண்டு பிரசுரம் வழங்கி அறிவுரை கூறி வருகிறார்கள்.

    இருப்பினும் விபரீதம் தொரியாமல் இன்னும் சிலர் தண்டவாளத்தை கடந்து செல்கிறார்கள்.

    இவ்வாறு தண்டவாளத்தை கடந்த ஒரு முதியவான் இரு கால்களும் துண்டான பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.

    கோபி குறிஞ்சி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 74). இவரது நண்பர் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வருவதாக கூறினார்.

    இதனால் அவரை பார்ப்பதற்காக ரவீந்திரன் ஈரோடு வந்தார். ஈரோடு பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் பிறகு டவுன் பஸ்சில் ஏற்காளை மாடு அருகே இறங்கினார்.

    இதன்பிறகு அங்கிருந்து ரெயில் நிலையத்துக்கு செல்வதற்காக அவர் காளை மாடு சிலை அருகே உள்ள ரெயில்வே குடியிருப்புவழியாக நடந்து சென்றார்.

    2-வது பிளாட் பாரம் செல்வதற்காக அவர் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சகாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்த ரெயிலை பார்த்ததும் அதிர்ச்சிஅடைந்த ரவீந்திரன் வேகமாக நடந்தார்.

    ஆனால் அதற்குள் அவர்மீது ரெயில் மோதியது. இதனால் அவரது 2 கால்களும் துண்டானது . ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த ரவீந்திரனை ஈரோடு ரெயில்வே போலீசார் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

    இது குறித்து ஈரோடு ரெ யில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் திடீரென மாயாமானார். இதுகுறித்து அவருடைய கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜான் சாமுவேல் (வயது 29). இவரது மனைவி சுபலட்சுமி ( 23). இவர்களுக்கு திருமணமாகி 2 மாதமே ஆகிறது.

    சுபலட்சுமி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல சம்பவத்தன்றும் இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் மாலையில் வெகு நேரமாகியும் சுபலட்சுமி வீடு திரும்பவில்லை. இது பற்றி ஜான் சாமுவேல் சென்று விசாரித்த போது தனது மனைவி காலையில் வேலைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதனால் சுபலட்சுமியை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை.

    எனவே இது பற்றி ஜான் சாமுவேல் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில் காணாமல் போன தனது மனைவி சுபலட்சுமியை கண்டு பிடித்து கொடுக்கும்படி கூறி உள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன புதுப்பெண் சுபலட்சுமியை தேடி வருகிறார்கள்.
    மனைவியை கொல்ல முயன்ற கணவருக்கு ஆயுள் தண்டனையையும், ரூ. 10 ஆயிரம் அபராதத்தையும் விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு டீச்சர்ஸ் காலனி பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    விஜயலட்சுமி ஈரோடு மார்க்கெட் பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடைக்கு வருபவர்களிடம் விஜயலட்சுமி சிரித்து கொண்டு சகஜமாக பேசுவாராம். இதனால்  கணவர் சிவக்குமார் விஜயலட்சுமியின் இந்த நடவடிக்கையால் சந்தேகம் அடைந்து தகராறு செய்தாராம்.

    இதனால் விரக்தி அடைந்து கோபித்து கொண்டு விஜயலட்சுமி ஈரோடு அருகே உள்ள கொளா நல்லி பகுதிக்கு சென்று விட்டார். சிவக்குமார் விஜயலட்சுமியை சமரசம் செய்து அழைத்து வந்து சேர்ந்து வாழ்ந்தார்.

    இந்த நிலையில் விஜயலட்சுமி பெயரில் வீடு ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. அதை விற்று தனக்கு பணம் வழங்க வேண்டும் என்று சிவகுமார் மனைவியிடம் கேட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் மனைவி விஜயலட்சுமியை இலை அறுக்கும் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். பிறகு ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதி திருநாவுக்கரசு விசாரணை நடத்தி வந்தார்.

    விசாரணை நடத்திய நீதிபதி திருநாவுக்கரசு இன்று சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட விஜய லட்சுமிக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என கூறினார்.

    இந்த வழக்கில் அரசு வக்கீலாக சுமதி கலந்து கொண்டு வாதாடினார்.
    கோபி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய கும்பலில் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.

    கோபி:

    கோபி மொடச்சூரைச் சேர்ந்தவர் குமார் (வயது 43). இவர் கடந்த 10-ந் தேதி கோபியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு தனது நண்பரின் மகன் திருமணத்திற்காக தனது பைக்கில் வந்தார்.

    அதை மண்டபத்தின் முன்பு நிறுத்திவிட்டு, பின்னர், வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. கோபியை அடுத்த நஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவரும் கடந்த 10-ந் தேதி நல்லகவுண்டம் பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை.

    அதேபோல், கோபி பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (43). இவர் பூக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 12 ம் தேதி காலை தனது பைக்கை தினசரி மார்க்கெட்டில் அருகில் உள்ள கடை முன்பு நிறுத்திவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது அவரது பைக்கை காணவில்லை.

    அப்போது ஒரு வாலிபர் அந்த பைக்கை திருடிக் கொண்டு செல்வதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில், அவரை பிடித்து கோபி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் கோபி அருகேயுள்ள பூதிமடைப் புதூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்(29) என தெரிய வந்தது. போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் ஒழுங்காக கிடைப்பதில்லை என கூறி அதை கண்டித்தும், பொருட்கள் தட்டு பாடின்றி வழங்க கோரியும் தி.மு.க.வினர் ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஈரோடு:

    ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் ஒழுங்காக கிடைப்பதில்லை என கூறி அதை கண்டித்தும், பொருட்கள் தட்டு பாடின்றி வழங்க கோரியும் தி.மு.க.வினர் ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாட்ட தி.மு.க. சார்பில் 400 ரே‌ஷன் கடைகளில் இன்று காலை முற்றுகை போராட்டம் நடந்தது.

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி அலுவலகம் முன்பு உள்ள ரே‌ஷன் கடையில் முற்றுகை போராட்டம் நடந்தது .

    தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்து சாமி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இது தவிர ஈரோடு மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் ரே‌ஷன் கடைகள் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது .

    இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காத போதும் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட முத்துசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகர் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் ஈரோடு கோட்டை பகுதி ரேசன் கடைமுன் கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணைச் செயலாளர் பாலசுந்தரம், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ள ரேசன் கடை முன்பாக ரே‌ஷன் கடை பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஜி.பி.வெங்கிடு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சரவணன் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் கள்ளிப்பட்டி பாலு, இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உதயகுமரன், மகிளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்ரா விஸ்வநாதன், நகர தி.மு.க செயலாளர் நாகராஜன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதே போல் பவானியில் காவேரி வீதியில் உள்ள ரேசன் கடையில் தி.மு.க. வினர் நகர செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரே‌ஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து தி.மு.க.வினர் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதில் தி.மு.க. தொண்டர்கள், பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    நம்பியூர் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தார்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள சாவக்காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு முள் காட்டில் ராயர்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி (வயது45). என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தார்.

    அவரை நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் கைது செய்தார். அவரிடமிருந்து 9 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் ராயர்பாளையத்தில் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி (50) என்பவர் தன்வீட்டுக்கு முன் உள்ள முள்வேலி அருகே அரசு அனுமதியின்றிகூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்றுக்கொண்டிருந்தாராம்.

    அந்தவழியாகரோந்து வந்த நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் அவரை கைது செய்தார். 8 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தார்.

    டி.என்.பாளையம் அருகே அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் பகுதி வேட்டைசாமி கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் வேட்டையன். இவரது தோட்டத்தில் காட்டு பன்றிகள் புகுந்து விடுவதால் அவற்றை விரட்ட நாட்டு துப்பாக்கி வாங்கி வைத்திருந்தாராம்.

    ஆனால் இந்த நாட்டு துப்பாக்கியை அவர் அனுமதி இல்லாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றிய ரகசிய தகவல் பங்களாபுதூர் போலீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வேட்டையனை கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வேட்டையன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    கேரள அரசை கண்டித்து ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தா.பாண்டியன் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேரள அரசு உடனே நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்து பவானி ஆற்றுநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

    கேரள அரசு தடுப்பணையை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உச்சநீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்க ளில் இன்று ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்படிருந்தது.

    அதன்படி ஈரோட்டில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, மார்க். கம்யூ. மாவட்ட செயலாளர் முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க். கம்யூ. செயற்குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தார்.

    இந்திய கம்யூனிஸ்டு தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் இதில் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். இவர்கள் ஈரோடு காளைமாடுசிலைக்கு திரண்டு, பிறகு அங்கிருந்து ரெயிலை மறிக்க ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் செயலாளர் குணசேகரன், வக்கீல் ப.பா. மோகன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் துளசி மணி உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

    முன்னதாக தா.பாண்டியன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நதிநீர் பிரச்சீனையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு 2 பூனைகள் இடையே அப்பத்தை பிரித்து கொடுக்கும் முறையை கையாள்கிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தங்களது ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதால் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படுகிறது.

    இந்த பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்வு காண முடிவு ஆகி இருந்தது. ஆனால் அதற்குள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இந்த நிலையில் இந்த பிரச்சினை கேட்பாறின்றி கவனிப்பாறின்றி உள்ளது.

    இவ்வாறு தா.பாண்டி யன் பேசினார்.

    பவானி பஸ் நிலைய கழிப்பறையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பவானி:

    பவானி,கணக்கங்காடு வடக்குபள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகன் சீனி என்கிற சீனிவாசன்(வயது28).

    சீனிவாசனுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சீனுவாசன் பவானி பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு குடி போதையில் சென்று உள்ளார்.

    நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த ஒப்பந்ததாரர் கழிப்பறைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்குள்ள ஒரு கழிப்பறையின் ஜன்னலில் தூக்கு போட்டு இறந்த நிலையில் சீனிவாசன் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் பங்கேற்கிறார்.

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது.

    பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டும் தடுப்பணையை உடனே நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உச்ச நீதிமன்ற மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடக்கிறது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன், மாக்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு உள்பட பலர் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    ×