என் மலர்
செய்திகள்

மனைவியை கொல்ல முயன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை: ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
மனைவியை கொல்ல முயன்ற கணவருக்கு ஆயுள் தண்டனையையும், ரூ. 10 ஆயிரம் அபராதத்தையும் விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு டீச்சர்ஸ் காலனி பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
விஜயலட்சுமி ஈரோடு மார்க்கெட் பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடைக்கு வருபவர்களிடம் விஜயலட்சுமி சிரித்து கொண்டு சகஜமாக பேசுவாராம். இதனால் கணவர் சிவக்குமார் விஜயலட்சுமியின் இந்த நடவடிக்கையால் சந்தேகம் அடைந்து தகராறு செய்தாராம்.
இதனால் விரக்தி அடைந்து கோபித்து கொண்டு விஜயலட்சுமி ஈரோடு அருகே உள்ள கொளா நல்லி பகுதிக்கு சென்று விட்டார். சிவக்குமார் விஜயலட்சுமியை சமரசம் செய்து அழைத்து வந்து சேர்ந்து வாழ்ந்தார்.
இந்த நிலையில் விஜயலட்சுமி பெயரில் வீடு ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. அதை விற்று தனக்கு பணம் வழங்க வேண்டும் என்று சிவகுமார் மனைவியிடம் கேட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் மனைவி விஜயலட்சுமியை இலை அறுக்கும் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். பிறகு ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதி திருநாவுக்கரசு விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணை நடத்திய நீதிபதி திருநாவுக்கரசு இன்று சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட விஜய லட்சுமிக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என கூறினார்.
இந்த வழக்கில் அரசு வக்கீலாக சுமதி கலந்து கொண்டு வாதாடினார்.

Next Story