என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி பஸ் நிலைய கழிப்பறையில்  வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    பவானி பஸ் நிலைய கழிப்பறையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    பவானி பஸ் நிலைய கழிப்பறையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பவானி:

    பவானி,கணக்கங்காடு வடக்குபள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகன் சீனி என்கிற சீனிவாசன்(வயது28).

    சீனிவாசனுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சீனுவாசன் பவானி பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு குடி போதையில் சென்று உள்ளார்.

    நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த ஒப்பந்ததாரர் கழிப்பறைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்குள்ள ஒரு கழிப்பறையின் ஜன்னலில் தூக்கு போட்டு இறந்த நிலையில் சீனிவாசன் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×