என் மலர்
செய்திகள்

அரச்சலூர் அருகே கல்குவாரியில் அழுகிய நிலையில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை
அரச்சலூர் அருகே கல்குவாரியில் அழுகிய நிலையில் 60 வயது ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரச்சலூர்:
அரச்சலூர் அருகே உள்ளது கொல்லன் வலசு. இங்குள்ள தனியார் கல் குவாரி பகுதியில் சுமார் 55 வயது முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் கிடந்தது. பிணம் கடந்த 4 நாட்களாக கிடப்பதாக தெரிகிறது. இதனால் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் அரைக்கால் டவுசரும், மெரூன் கலர் சட்டையும் அணிந்திருந்தார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இங்கு வந்து இறந்து கிடந்தார்? என்று தெரியவில்லை. இது தொர்டர்பாக அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடைக்கம் செய்யப்படும் என தெரிகிறது.
Next Story






