என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் மோதி முதியவர் 2 கால்களும் துண்டானது
    X

    ரெயில் மோதி முதியவர் 2 கால்களும் துண்டானது

    ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் தண்டவாளத்தை முதியவர் கடக்க முயன்ற போது ரெயில் மோதி 2 கால்களும் துண்டானது.
    ஈரோடு:

    ரெயில் தண்டவாளத்தை சிலர் கடந்து செல்கிறார்கள். இந்த நேரத்தில் அந்த வழியாக வரும் ரெயில் அவர்கள் மீது மோதி விடுகிறது.

    இதனால் பலர் உயிரிழந்து வருகிறார்கள். ஏராளமான பேர் படுகாயம் அடைகிறார்கள்.

    எனவே தண்டவாளத்தை கடந்து சொல்ல வேண்டாம் என்று ஈரோடு ரெயில்வே போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் துண்டு பிரசுரம் வழங்கி அறிவுரை கூறி வருகிறார்கள்.

    இருப்பினும் விபரீதம் தொரியாமல் இன்னும் சிலர் தண்டவாளத்தை கடந்து செல்கிறார்கள்.

    இவ்வாறு தண்டவாளத்தை கடந்த ஒரு முதியவான் இரு கால்களும் துண்டான பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.

    கோபி குறிஞ்சி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 74). இவரது நண்பர் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வருவதாக கூறினார்.

    இதனால் அவரை பார்ப்பதற்காக ரவீந்திரன் ஈரோடு வந்தார். ஈரோடு பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் பிறகு டவுன் பஸ்சில் ஏற்காளை மாடு அருகே இறங்கினார்.

    இதன்பிறகு அங்கிருந்து ரெயில் நிலையத்துக்கு செல்வதற்காக அவர் காளை மாடு சிலை அருகே உள்ள ரெயில்வே குடியிருப்புவழியாக நடந்து சென்றார்.

    2-வது பிளாட் பாரம் செல்வதற்காக அவர் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சகாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்த ரெயிலை பார்த்ததும் அதிர்ச்சிஅடைந்த ரவீந்திரன் வேகமாக நடந்தார்.

    ஆனால் அதற்குள் அவர்மீது ரெயில் மோதியது. இதனால் அவரது 2 கால்களும் துண்டானது . ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த ரவீந்திரனை ஈரோடு ரெயில்வே போலீசார் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

    இது குறித்து ஈரோடு ரெ யில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×