search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை
    X

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை

    • மாவட்டத்தில் அதிக பட்சமாக வரட்டுபள்ளம் பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • மாநகரில் இன்று அதிகாலை முதல் பனிமூட்டத்துடன் தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் தேங்குவதாலும், மின் தடையாலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், பெருந்துறை, நம்பியூர், வரட்டுபள்ளம், சென்னிமலை, தாளவாடி, கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், மொடக்குறிச்சி, அம்மாபேட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக ஈரோடு, நாடார்மேடு பகுதியில் உள்ள விக்னேஷ் நகர், கெட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இன்சுலேட்டர் வெடித்ததில் மின் தடை ஏற்பட்டதை கண்டறிந்த மின்சாரத்துறையினர் அதனைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக இரவு 10 மணிமுதல் அதிகாலை வரை அப்பகுதியில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.

    இதேபோல மாவட்ட த்தின் பிற பகுதியான கோபியிலும் மின் தடை ஏற்பட்டது. இதுபோல் மாவட்டத்தில் அதிக பட்சமாக வரட்டுபள்ளம் பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் வரட்டுபள்ளம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

    தொடர்ந்து இரவு முதல் காலை வரை சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாநகரில் இன்று அதிகாலை முதல் பனிமூட்டத்துடன் தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    வரட்டுபள்ளம்-41, பெருந்துறை-26, நம்பியூர்-24, சென்னி மலை-24, தாளவாடி-16, கவுந்தப்பாடி-12, கோபி-8, மொடக்குறிச்சி-5, அம்மாபேட்டை-4.4, ஈரோடு-4, கொடுமுடி-2, பவானி-2.

    Next Story
    ×