என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    • பெருந்துறை அருகே தங்கை கணவருடன் வாழாமல் வீட்டுக்கு வந்ததால் சோகத்தில் அண்ணன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து அகிலனின் தாய் ரீட்டா அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் அகிலன் (25). இவரது சகோதரி உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலை வீட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் நீலகிரியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் கணவருடன் சேர்ந்து வாழாமல் கடந்த 14-ந் தேதி காஞ்சிக்கோவிலில் உள்ள தனது தாய் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட அகிலன் சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொ லைக்கு முயன்றுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அகிலனின் தாய் ரீட்டா அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×