search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
    X

    குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி சி.எஸ்.ஐ. சர்ச்சில் இருந்து மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக ஊர்வலமாக சென்ற கிறிஸ்தவர்கள்.

    ஈரோட்டில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

    • ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.
    • கிறிஸ்தவர்கள் முழங்க வழிபாட்டு பாடல்களை பாடியபடி சென்றனர்.

    ஈரோடு:

    ஏசு கிறிஸ்து இறை பணியை தொடங்குவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்துள்ளார். இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொண்டு ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தை கொண்டாடு வது வழக்கம்.

    ஈஸ்டர் தினத்திற்கு முந்தைய ஞாயிற்றுக்கி ழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கிறார்கள்.

    அதன்படி இன்று காலை ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலமானது நடு வீதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து தொடங்கி ஸ்டேட் பேங்க் சாலை வழியாக புனித அமல அன்னை ஆலயத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து குருத்தோலை ஞாயிறுயையொட்டி சிறப்பு திருப்பலியும் நடந்தது.

    இதேபோல் சி.எஸ்.ஐ. சர்ச்சில் பாதிரியார் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் சர்ச்சில் தொடங்கி, மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக சவிதா சந்திப்பு வரை சென்று மீண்டும் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக சர்ச்சில் நிறைவடைந்தது.

    இந்த ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இசை வாத்தியங்கள் முழங்க வழிபாட்டு பாடல்களை பாடியபடி சென்றனர்.

    தொடர்ந்து வருகிற 6-ந் தேதி பெரிய வியாழனும், இயேசு சிலுவையில் அறை யப்பட்ட நாளான 7-ந் தேதி புனித வெள்ளியும், ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டா டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×