search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வட மாநில சிறுமி தூக்குபோட்டு தற்கொலை
    X

    வட மாநில சிறுமி தூக்குபோட்டு தற்கொலை

    • மின் விசிறி மாட்டும் கொக்கியில், துப்பட்டாவால் தூக்கு மாட்டிய நிலையில் ரூபினா கதுன் தொங்கியவாறு இருந்துள்ளார்.
    • இது குறித்து தந்தை ருலமின் காஸி அளித்த புகாரின்பேரில் திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் ருலமின் காஸி (40).

    இவர் தனது மனைவி ரூப்சனா, மூத்த மகள் ரூபினா கதுன் (16), இளைய மகள் ரீனா கதுன் ஆகியோ ருடன் ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள சின்ன வீரசங்கிலி பகுதியில் வசித்து அங்குள்ள கோழிப் பண்ணை ஒன்றில் கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ருலமின் காஸி அவரது மனைவி மற்றும் 2-வது மகள் ஆகியோருடன் விஜயமங்கலம் சந்தைக்கு பொருள்கள் வாங்க சென்று விட்டார். மூத்த மகள் ரூபினா கதுன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

    சந்தைக்கு சென்றவர்கள் இரவு சுமார் 8 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளனர். மூடப்பட்டிருந்த கதவை திறந்து பார்த்தபோது, மின் விசிறி மாட்டும் கொக்கியில், துப்பட்டாவால் தூக்கு மாட்டிய நிலையில் ரூபினா கதுன் தொங்கியவாறு இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரூபினா கதுனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து தந்தை ருலமின் காஸி அளித்த புகாரின்பேரில் திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×