search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை அதிகரிப்பு
    X

    நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை அதிகரிப்பு

    • நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்து நுங்கும், நுரையுமாக செல்கிறது.
    • இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீரில் உப்பு தன்மை அதிகரித்துள்ளதால் விவசா யிகள் அதிர்ச்சி அடைந்து ள்ளனர்.

    சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    அதன்பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் சாயக் கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜாக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளி யேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி பல வருடங்க ளாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது.

    ஆனால், மழைக் காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவு கள் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    ஆனால், கடந்த டிசம்பர் மாதங்களில் மழை வெள்ள நீர் அதிகமாக வந்ததால் சாயக்கழிவுகளே இல்லாமல் சுத்தமான தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்பு தன்மை 330 டி.டி.எஸ் என்ற அளவில் இருந்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆனால், அவர்களின் மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்க வில்லை நேற்று காலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை 1860 டி.டி.எஸ்., சாக உயர்ந்துள்ளது.

    தற்போது நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகள் கலந்து நுங்கும், நுரையுமாக செல்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆற்றங்கரை யோர விவசாயிகள் கூறுகையில்:

    நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் கடந்த மாதம் ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடை ந்தோம். ஆனால், திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை களால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது.

    உப்பு தன்மையும் அதிகரித்து விட்டது இனி இந்த தண்ணீரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதே சிரமம் என்றனர்.

    Next Story
    ×