என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
  X

  கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு அருகே கடுமையான வயிற்று வலியால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
  • இது குறித்து தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஈரோடு, ஜூலை. 29-

  ஈரோடு அருகே செட்டிபாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் அபிராமி (20).

  இவர் திண்டலில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அபிராமிக்கு வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

  இந்நிலையில் சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலி வந்ததால் மனமுடைந்து எலி பேஸ்ட் (விஷம்)தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×