search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு
    X

    பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு

    • பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • ஆப்பக்கூடல் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகேயுள்ள ஆ.புதுப்பா ளையத்தை சேர்ந்த நவநீதன் (வயது 36). இவர் நேற்று மதியம் ஆப்பக்கூடல் அரசு மதுபானக கடையில் மது வாங்கிக்கொண்டு அருகே உள்ள காலி இடத்தில் உட்கார்ந்து மது குடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

    அப்போது, அங்கு வந்த கூத்தம்பூண்டி அண்ணாநகரை சேர்ந்த மாரிமுத்து (வயது 31) என்பவர் இவரின் காலை மிதித்து உள்ளார். இதனை தட்டி கேட்ட நவநீதனிடம் மாரிமுத்து தகராறில் ஈடுபட்டு, கீழே கிடந்த பீர் பாட்டிலால் நவநீதனை தாக்கியதோடு பீர் பாட்டிலால் குத்தி கொன்று விட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதில் நவநீதனுக்கு நெற்றி மற்றும் வலது பக்க கன்னத்தில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் நவநீதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×