search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 நாய்க்குட்டிகள் மீட்பு
    X

    4 நாய்க்குட்டிகள் மீட்பு

    • 4 நாய்க்குட்டிகள் சாலையில் குறுக்கே அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தது.
    • செல்ல பிராணிகளை சாலையில் விடாமல் பாதுகாக்க முன்வர வேண்டும்.

    கோபி:

    கோபிசெட்டி பாளை யத்தில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் பாரியூர் கோவில் அருகே பிறந்து சில நாட்களே ஆன 4 பெண் நாய்க்குட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சாலையோரமாக விட்டு சென்றுள்ளனர்.

    அப்போது பசியில் தவித்த அந்த 4 நாய்க்குட்டிகள் சாலையில் குறுக்கே அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தது. இந்த நாய்க்குட்டிகளுக்கு அந்த வழியாக சாலையில் செல்லும் சில வாகன ஓட்டிகள் பால் ஊற்றி சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கோபியில் இருந்து அத்தாணி சாலையில் செல்லும் பாரியூர் அருகே சாலையோரம் கைவிடப்பட்ட நாய்க்குட்டி களின் பரிதாப நிலை கண்டு ஆப்பக்கூடல் நர்சிங் கல்லூரி முதல்வர் கலை வாணி என்பவர் நாய்க்குட்டி களை மீட்டு சென்று உள்ளனர்.

    அப்போது கூகலூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நாய்க்குட்டிகளுக்கு பிஸ்கட் கொடுத்து நாய்க்குட்டிகளை மீட்க உடன் இருந்து உதவினார்.

    இதனையடுத்து 4 நாய்க் குட்டிகளையும் தாய் அன்புடன் மீட்டு சென்ற சம்பவத்தை நேரில் பார்த்த சாலையோர வாகன ஓட்டிகள் மற்றும் பிராணிகள் நல ஆர்வலர்கள் சிலர் நாய்க்குட்டிகளை மீட்டு சென்ற நபருக்கு உணர்வுபூர்வமாக நன்றி தெரிவித்து சென்றதையும் காண முடிந்தது.

    பூனைக்குட்டி மற்றும் நாய்க்குட்டி உள்ளிட்ட வீட்டு செல்ல பிராணிகளை சாலையில் விடாமல் பாதுகாக்க முன்வர வேண்டும். அல்லது பிராணிகள் நல அமைப்பு தொடர்பு கொண்டு பாதுகாக்க வேண்டும் என்பதே பிராணிகள் நல ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

    Next Story
    ×