search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இ.பி.எப் பென்சன்தாரர்கள் மத்திய அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம்
    X

    கோவையில் இ.பி.எப் பென்சன்தாரர்கள் மத்திய அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம்

    • பென்சனை உயர்த்தவேண்டும் என கூறி இ.பி.எப் பென்சன்தாரர்கள் நலசங்கம் சார்பாக கூட்டம் நடைபெற்றது.
    • ஜி.என்.மில்ஸ் தபால் நிலையம் அருகே 100க்கும் அதிகமானோர் தபால் அனுப்பினர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் பஞ்சாலை மற்றும் என்ஜினியரிங் கம்பெனிகளில் வேலை பார்த்து சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்ட பென்சன்தார்கள்கள் உள்ளனர். அவர்கள் இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பென்சன் பெற்று வருகின்றனர்.

    இதனை உயர்த்தவேண்டும் என கூறி இ.பி.எப் பென்சன்தாரர்கள் நலசங்கம் சார்பாக சென்னையில் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரலில் மணியோசை எழுப்பும் போராட்டம் நடந்தது.

    தொடர்ந்து மேலும் தமிழகம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பிரதமருக்கு தபால்கார்டு அனுப்பும் போராட்டம் நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக இன்று கோவை ஜி.என்.மில்ஸ் தபால் நிலையம் அருகே 100க்கும் அதிகமான இ.பி.எப் பென்சன்தாரர்கள் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அனைவரையும் உறுப்பினர் தேவேந்திரன் வரவேற்றார். சங்க உறுப்பினர் மவுனசாமி சிறப்புரை–யாற்றினார்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பென்சனை உயர்த்துவதுடன் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். இடைகாலமாக மாதம் ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்கவேண்டும். இ.பி.எப் பென்சன்தாரர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமுல்படுத்தவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதியுள்ள அனைவருக்கும், உயர் பென்சன் வழங்க வேண்டும்.

    மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் அமுல்படுத்தவேண்டும் என கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து தபால் பெட்டியில் தபால்கார்டுகளை போட்டு அனுப்பினர்.

    Next Story
    ×