என் மலர்
உள்ளூர் செய்திகள்

வினாடி-வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி
- அரசு உதவி நடுநிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடத்தியது.
- முதலாவதாக எழுத்து த்தேர்வு நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாயுமானவர் வித்யாலயம் அரசு உதவி நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடத்தியது.
போட்டியில் சுற்று வட்டார பள்ளிகளிலிருந்து பதிவு செய்த மாணவர்கள் கலந்து கொண்டனர். முதலாவதாக எழுத்து த்தேர்வு நடைபெற்றது.
அதில் வெற்றிபெற்ற 10 மாணவர்கள் முதன்மை வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியில் வடமழை கந்தவிலாஸ் அரசு உதவி நடுநிலைப்பள்ளி, பன்னாள், மருதூர் தெற்கு, ராஜன்கட்ட ளை ஆகிய அரசினர் உயர்நிலைப்பள்ளிகள், தேத்தாக்குடி-தெற்கு அல்நூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் வீதம் 5 மாணவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 16-ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகப்பட்டினம் மாவட்ட துணைத்தலைவரும், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான சந்தோஷ் காட்சன் மற்றும் வடமழை கந்தவிலாஸ் அரசு உதவி நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க வேதாரண்யம் வட்டார துணைத்தலைவர் மற்றும் பொறுப்பு செயலாளருமான அறிவொளி ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.
இதில் வட்டார ஆசிரியர்கள் நந்தினி, செல்வராணி, வீரபாண்டியன், அனிதா மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்படுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க வேதாரண்யம் வட்டார தலைவர் கருப்பம்புலம் சித்திரவேலு செய்திருந்தார்.






