search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடன்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடன்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    • பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மகளிருக்கு நிலம் வாங்குவதற்கு வங்கியுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது.
    • அதாவது ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானிய தொகையும், மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களின் கீழ் மகளிருக்கான சுய உதவி குழுக்கள் தொழில் தொடங்குவதற்கு 50 சதவீதம் அதாவது ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மானிய தொகையும், மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும்.

    மேலும், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மகளிருக்கு நிலம் வாங்குவதற்கு வங்கியுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது. நிலம் வாங்கும் திட்டத்தில் விண்ணப்பதாரர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும், வயது 18-ல் இருந்து 65-க்குள்ளும் இருக்க வேண்டும். நிலம் வாங்கும் திட்டத்தில் அதிகபட்சமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லா தவரிடம் இருந்து நிலம் வாங்க வேண்டும். இந்த திட்டத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்துள்ளது. நிலம் வாங்கும் அரசு மதிப்பீட்டு தொகையில் 30 சதவீதம் அதிகப்பட்சமாக அதாவது ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானிய தொகையும், மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும்.

    நில மேம்பாட்டு திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நில வளத்தை மேம்படுத்துதல், ஆழ்குழாய் கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்தல் போன்றவற்றிற்காக 30 சதவீதம் அதாவது ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானிய தொகையும், மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும்.மருத்துவர் பட்டம் பெற்று இந்தியன் மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் சொந்தமாக மருத்துவமனை அமைப்பதற்கும், மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த இளைஞர்களுக்கு முடநீக்கு மையம் மருந்தகம் (Physiotherapy Center), மருந்தகம் (Pharmacy), இரத்த பரிசோதனை நிலையம் (Clinical Laboratory), மற்றும் கண் கண்ணாடியகம் (Opticals) அமைப்பதற்கு 30 சதவீதம் அதாவது அதாவது ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானிய தொகையும் மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும்.

    கடன் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் சாதி சான்று வருமானச்சான்று, குடும்ப அட்டை / இருப்பிடச்சான்று, ஆதார்அட்டை, செய்வி ருக்கும் தொழிலுக்கான விலைப்புள்ளி திட்டஅ றிக்கை (வாகன வாங்கு வதற்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் பேச்ஜ் ) ஆகிய சான்றுகளுடன் விண்ண ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ மேலாளரை அணுகலாம். தொடர்புக்கு. 04362-256679 ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×