என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குஞ்சப்பனையில் பலாப்பழத்தை ருசித்த யானைகள்
    X

    குஞ்சப்பனையில் பலாப்பழத்தை ருசித்த யானைகள்

    • தனியார் எஸ்டேட்டில் பலாப்பழ சீசன் என்பதால் பலாப்பழகத்தை ருசிக்கும் நோக்கில் யானைகள் சுற்றி திரிகின்றன.
    • அவ்வப்போது யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. இதனால் யானைகள் எப்போது வரும் என்ற அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர்.

    அரவேணு:

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் இடையே குஞ்சப்பனை ஊராட்சிக்கு உட்பட்ட மாமர தனியார் எஸ்டேட் பகுதி உள்ளது.

    அதில் 6 பெரிய யானை, 2 குட்டி யானைகள் முகாமிட்டு உள்ளது. தனியார் எஸ்டேட்டில் பலாப்பழ சீசன் என்பதால் பலாப்பழகத்தை ருசிக்கும் நோக்கில் யானைகள் சுற்றி திரிகின்றன. அங்குள்ள தொழிலாளர்கள் விரட்டினால் யானை கள் கோழிக்கரை கிராமத்துக்குள் புகுந்து விடுகின்றன.

    மேலும் அவ்வப்போது யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. இதனால் யானைகள் எப்போது வரும் என்ற அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர். எனவே யானைகளை அங்கிருந்து விரட்ட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×