search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மின்துறை ஊழியர்களை படத்தில் காணலாம்.

    காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • தலைமை மின்துறை அலுவலக வாயிலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 189 கட்டுமான உதவியாளர்களை, பதவி உயர்வு மூலம் உதவியாளர்களாக நிரப்பவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மின்துறையில், காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும், பதவி உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் தலைமை மின்துறை அலுவலக வாயிலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் வேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். குறிப்பாக, 189 கட்டுமான உதவியாளர்களை, பதவி உயர்வு மூலம் உதவியாளர்களாக நிரப்பவேண்டும். கடந்த 14 ஆண்டுகளாக நிரப்ப படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள டெஸ்டர் பதவியினை உடனே நிரப்பவேண்டும். 2006ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழி யர்களை விட, 2011ல் சேர்ந்த ஊழியர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் முரண்பாடுகளை நீக்கவேண்டும். யூனியன் பிரதே சங்களில் மின்துறை யை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசின் முடிவைக் முழுமையாக கைவி டவேண்டும். உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறு த்தப்பட்டது. மேலும், மின்துறை ஊழிய ர்களின் கோரி க்கையை போர்க்கால அடிப்ப டையில் நிரப்பா விட்டால், காரைக்காலில் உள்ள அரசு ஊழியர்கள் நலசங்க ஙக்ளை ஒன்று திரட்டி, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, சங்க தலைவர் தெரிவி த்துள்ளார்.

    Next Story
    ×