என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது
    X

    கோவையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது

    • நவீன் மாணவியை சினாக்ஸ் வாங்கி தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு அழைத்து சென்றார்.
    • போலீசார் நவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள விளாங்குறிச்சியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 2022-ம் ஆண்டு மாணவி சேரன்மாநகரில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே வசித்து வந்த கார் டிரைவர் நவீன் (வயது 21) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று மாணவி வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நவீன் மாணவியை சினாக்ஸ் வாங்கி தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு அழைத்து சென்றார். மளிகை கடை பின்புறம் வைத்து டிரைவர் மாணவியிடம் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறி கட்டிபிடித்து பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நவீன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    அவர் தினசரி மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். நாளடைவில் தொல்லை அதிகரிக்கவே மாணவி இதுகுறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கார் டிரைவர் நவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×