என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    X

    உடன்குடியில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    உடன்குடியில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

    • முகாமிற்கு நகர செயலாளர் சந்தைடியூர் மால்ராஜேஷ் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமினை தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி நகர தி.மு.க. சார்பில் நடந்த 'உடன் பிறப்புகளாய் ஒன்றிணைவோம் வா' உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு நகர செயலாளர் சந்தைடியூர் மால்ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    மாநில மகளிரணி பிரசார குழு துணைச் செயலாளர் ஜெஸி பொன்ராணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிதிகள் ஹீபர்மோசஸ், முபாரக், மணப்பாடு ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமினை தொடங்கி வைத்தார்.

    இதில் முக்காணி கூட்டுறவு சங்கதலைவர் உமரிசங்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாள் மகாவிஷ்ணு, மாவட்ட துணை அமைப்பா ளர்கள் வர்த்தக அணி ரவிராஜா, மீனவரணி மெராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜான்பாஸ்கர், சரஸ்வதி பங்காளன், பஷீர், பிரதீப் கண்ணன், மும்தாஜ், சபனா, அன்வர்சலீம், சித்திரை செல்வன், சலீம், கணேசன், சாம்நேஸ், ராஜேந்திரன், முத்துபாண்டி, கணேஷ், நாராயணன், பேரூராட்சி நிர்வாகிகள் அப்துல் ரசாக், தங்கம், திரவியம், மேகநாதன், பிரவீனா, ஹரி, ராஜ்குமார், இஸ்மாயில் இசக்கிமுத்து, கணேசன், நிர்மல்சிங், இசக்கிப்பாண்டி, ஸ்டெல்லா, செண்பகவள்ளி, கிளாட்வின், பைசுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×