search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • திருவிழா கடந்த 15-ந்தேதி காலையில் கணபதி ஹோமமும், சக்தி பூஜையுடன் தொடங்கியது.
    • பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா கோடுகிழி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெறும் கோயில் திருவிழா கடந்த 15-ந்தேதி காலையில் கணபதி ஹோமமும், சக்தி பூஜையுடன் தொடங்கியது .

    தீ மிதி விழாவை முன்னிட்டு நேற்று இரவு வெட்டாற்றின் கரையில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஆண், பெண் பக்தர்கள் ஏராளமானோர் பக்தி பரவத்துடன் தீக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து அம்பாள் ஊர்வலம் நடைபெற்றது. தீமிதி திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோடுகிளி கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×