என் மலர்
தர்மபுரி
- ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
- காரை வழிமறித்து உறவினர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
ஏரியூர்,
ஏரியூர் அருகே உள்ள கோடல்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர், இவர் திருப்பதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், பெரும்பா லையை சேர்ந்த ஜெய்ஸ்ரீ என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஜெயஸ்ரீ கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீடான பெரும்பாலையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மனைவி யை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, ராஜசேகர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம், பெரும்பா லையில் உள்ள ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் மாமனாரை தாக்கி யதாகவும் கூறப்ப டுகிறது.
இதனை தொடர்ந்து தனது மனைவியை தன்னு டன் சேர்த்து வைக்க கோரி பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதே போல மாமனாரை தாக்கி யதாக ஜேய்ஸ்ரீ உறவி னர்கள் ராஜசேகர் மீது புகார் அளித்தனர். இந்நிலையில் விசார ணைக்காக பெரும்பாலை போலீசார் இரு குடும்ப த்தையும் போலீஸ் நிலையம் வரவழைத்துள்ளனர்.
இதனை அறிந்த ஜெய்ஸ்ரீ உறவினர்களான ஜெயரா மன் (41) சண்முகம் (24) கணேசன் (31) பார்த்திபன் (26) உள்ளிட்ட 5 பேர் பெரும்பாலை நுழை வாயிலில் நின்று ராஜசேகர் வந்த ஆம்னி காரை வழிமறித்து அதில் இருந்த அவரது உறவினர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த மாதம்மாள், விக்ரமன் (28 )ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து பெரும்பாலையைச் சேர்ந்த ஜெயராமன் சண்முகம், கணேசன், பார்த்திபன் ஆகிய 4 கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
- பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.
- வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.
மாரண்ட அள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த இன்பசேகரன் (வயது 25). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.
இதையறிந்த தரும்புரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் வாலி பர் மீது நட வடிக்கை எடுக்க கோரி மாரண்டஅள்ளி போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாரண்டஅள்ளி போலீ சார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் நேரடி விசாரணை நடத்தினர்.
- அசைவ உணவகங்களில் தரமான இறைச்சிகள் மூலமாக உணவுகள் தயாரித்து விற்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி:
தருமபுரி நகராட்சி அலுவலகம் அருகே கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் விற்பனை செய்த மெதுவடையை சண்முகம் என்பவர் வாங்கி சாப்பிட வடையை பிரித்த போது அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனையடுத்து கடை உரிமையாளரிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் நேரடி விசாரணை நடத்தினர். மேலும் அந்த கடை சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கடையை சுகாதாரமாக வைக்க அறிவுறுத்தியதோடு மீண்டும் தாங்கள் சோதனைக்கு வரும் போது சுகாதாரமற்ற முறையில் இருந்தால் கடையை சீல் வைக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் தருமபுரி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
தருமபுரி நகரில் சாலையோர கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் மற்றும் பலகாரங்கள் விற்கப்படுகின்றன. மேலும் அசைவ உணவகங்களில் தரமான இறைச்சிகள் மூலமாக உணவுகள் தயாரித்து விற்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வடையில் பல்லி இருக்கும் அவலங்கள் நடக்காது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சபரிமலைக்கு மாலை அணிவதாக கூறி ஒகேனக்கல்லுக்கு வந்த கிராம நிர்வாக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் சோமனஅள்ளி ஆதி திராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகண்ணன் (வயது 50). இவருக்கு திருமணமாகி சாலம்மாள் (47) என்ற மனைவியும், அருளேஷ் (31), ஜெயசீலன் (24) என்ற மகன்களும், ஜெயகிருபா (26) என்ற மகளும் உள்ளனர்.
ஜெயகண்ணன் இண்டூர் கிராம நிர்வாக உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
ஜெயகண்ணனின் இளைய மகன் ஜெயசீலன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஜெயகண்ணன் மனவேதனையுடன் காணப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சபரிமலைக்கு மாலை அணிவிப்பதாக கூறிவிட்டு ஒகேனக்கல் வந்திருந்த ஜெயகண்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனே ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து ஜெயகண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகண்ணன் தனது மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 மாதங்களுக்கு முன்பிருந்து அகல்விளக்கு தயாரிக்கும் பணியினை துவங்கினர்.
- ரூ. 1000க்கு விற்கபடுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்சிய டைந்துள்ளனர்.
தருமபுரி,
தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருநாள். ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அகல் விளக்குகளில் எண்ணை ஊற்றி வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். காத்திகை தீப திருநாளை யொட்டி மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த்தி கைக்கு 2 மாதத்திற்கு முன்பி ருந்தே அகல் விளக்கு தயாரிக்கும் பணியை துவங்கி விடுவார்கள்.
அதே போல் தருமபுரி அருகேயுள்ள அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம், மல்லி குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்து அகல்விளக்கு தயாரிக்கும் பணியினை துவங்கினர்.
இந்நிலையில் கார்த்திகை தீபதிருநாள் இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில் இப்பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு 1000 விளக்குகள் ரூ. 600 முதல் 700 ரூபாய் வரை விற்கபட்ட நிலையில் இந்தாண்டு 1000 விளக்குகள் ரூ. 1000க்கு விற்கபடுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்சிய டைந்துள்ளனர்.
மேலும் இங்கு தயாரிக்கும் விளக்குகளை தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.
மேலும் ஏரி, குளம், குட்டைகளில் இருந்த மண் எடுத்து மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். மண் எடுப்பதற்காக அனுமதி வழங்கிய அரசு தற்போது இரண்டு வருடமாக மண் எடுக்க அனுமதி வழங்காமல் கெடுபிடி செய்து வருகிறது.
மேலும் ஓசூர் அதியமான் கோட்டை தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மண் எடுப்பதால் மண் கிடைக்காமல் தங்களால் போதிய அளவில் தயாரிக்க முடியாமல் இருந்து வருகிறோம். ஆகையால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு குளம் குட்கைளில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 8 மாணவர்கள் காயம்
- அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கடத்தூர்,
ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி பஸ் பாப்பிரெ ட்டிப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி யில் இருந்து சுகர் மில் வழியாக மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது.
அப்பொ ழுது அம்மாபாளையம் ஜாலிகாடு பிரிவு ரோடு அருகில் பஸ் சென்ற பொழுது ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில்பஸ்ஸின் முன்பக்கம் அமர்ந்து பயணம் செய்து வந்த 8 மாணவ மாணவியர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இந்த பஸ்ஸை ஆலாபுரம் நடுவர் பகுதியைச் சேர்ந்த குமார் ஓட்டி வந்தார். இவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து ஆ பள்ளிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரம் என்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் குறைந்த அளவே பஸ்ஸின் பின்பகுதியில் அமர்ந்திருந்த நிலையில் முன் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாத வகையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஒப்பந்த தொழிலாளர்கள் என 200க்கும் மேற்ப ட்டோர் வேலை செய்கின்றனர்.
- இ எஸ், பி.எப், பிடித்தம் போக 315 ரூபாய் தின கூலியாக வழங்கப்படுகிறது
தருமபுரி,
தருமபுரி நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட த்தில் நேற்று காலை முதல் இரவு கடும் குளிரிலும் , மழையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உயர் நீதிமன்ற உத்தரவு ப்படி உள்துறை தலைமைச் செயலாளர் சிவராமன் ஐ.ஏ.எஸ், ஆணையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தருமபுரி நகராட்சி ஒப்பந்த ஊழி யர்கள் நேற்று காலை முதல் இன்றும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் நிரந்தர பணியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என 200க்கும் மேற்ப ட்டோர் வேலை செய்கின்றனர்.
இதில் ஒப்பந்த தொழிலா ளர்களை சென்னை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் (சரம் எனர்வோ) என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ஆண்கள் பெண்கள் என 106 பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு இ எஸ், பி.எப், பிடித்தம் போக 315 ரூபாய் தின கூலியாக வழங்கப்படுகிறது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் பற்றாக்குறை என்பதால் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். என உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழ்நாடு உள்துறை தலைமைச் செயலாளர் சிவராம் ஐ.ஏ.எஸ். ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக 610 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆணை கடந்த மாதம் 27 ந்தேதி அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தருமபுரி ஒப்பந்த ஊழிய ர்களுக்கு உள்துறை செயலா ளர் ஆணையை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
அதற்கு நகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிப்படை ந்துள்ளதாக தருமபுரி நகராட்சியில் உள்ள 106 ஒப்பந்த ஊழியர்களும் இன்று மூன்று அம்ச கோரிக்கை களான உயர்நீதி மன்ற தீர்ப்பின்படி ஒப்பந்த ஊழி யர்களுக்கு நாள் ஒன்றுக்கு 610 ரூபாய் வழங்க வேண்டும்.
மேலும் தீபாவளி போனஸ் ஆக ரூபாய் 7000 வழங்க வேண்டும். தொழிலாளியின் சம்ப ளத்தில் பிடித்தம் செய்த பி.எஃப் மற்றும் இதர பணத்தை உரிய அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவிலும் அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இரவு வீசிய குளிரிலும், அதிகாலை பெய்த மழையிலும் நனைந்தபடி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீஸ் வருவதை அறிந்த இளங்கண்ணன் தப்பி ஓடிவிட்டார்.
- 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
தருமபுரி
தருமபுரி மாவட்டம் அரூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு மதுபானத்தை பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அரூர் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர். அப்போது தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எல்ல புடையாம்பட்டி அருகே உள்ள கெளாப் பாறை கிராமத்தைச் சேர்ந்த இளங்கண்ணன்( வயது 45 )வீட்டில் சோதனை செய்ய சென்ற போது போலீஸ் வருவதை அறிந்த இளங்கண்ணன் தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் போலீசார் இளங்கண்ணன் வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் பின்புறம் 19 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதில் சில பாட்டில்களில் மூடி திறக்கப்பட்டு இருந்தது. அந்த பாட்டில்களில் ஊம த்தங்காய் சாறை கலந்து விற்பனைக்கு வைத்தி ருப்பது தெரியவந்தது.
ஊமத்தங்காய் கலந்த மதுவை குடித்தால் குடிமகன்களுக்கு கூடுதல் போதை கிடைப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 150 மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளங்கண்ணனை தேடி வருகின்றனர்.
- கடந்த 4 ஆண்டுகளாக பகுதி நேர ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.
- அலுவலக வாசல் முன்பு நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி.
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள் 2பேருக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்த பணியாளர்களாக இருந்து வருபவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கோகிலா (42) மற்றும் மெகராஜ்( 45) ஆகிய இருவர் இந்த திட்டத்தின் கீழ் பேரூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக பகுதி நேர ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் இது குறித்து செயல் அலுவலர் கலா ராணியிடமும், பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி ஆகியோரிடம் பலமுறை தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி நேற்று 12 மணி அளவில் அலுவலக வாசல் முன்பு நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தர்ணா போராட்டத்திற்கு பிறகு பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் இருவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இச்ச சம்பவத்தால் பேரூராட்சி அலுவலகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
- நீதிமன்றத்தில் ஆஜரானவர்களிடம் நீதிபதி கேள்விகளை கேட்டார்.
- வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
தருமபுரி:
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்காக அவர் மீது 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இன்று 2 வது முறையாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட 11 பேரும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானர். அவர்களிடம் சில கேள்விகளை நீதிபதி கேட்டார்.
பின்னர் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
- கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்
- 2000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி,
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டா மாற்றம் செய்வதற்கான சிறப்பு மனுக்கள் பெரும் முகாம் தமிழகம் முழுவதும் நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்டி தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த சிறப்பு முகாமில் பட்டா, சிட்டாவில் உள்ள எழுத்து பிழை, பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் உள்ளிட்டவைகளும் சரிபார்க்கபட்டது. இதில் தருமபுரி, பென்னாகரம், காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட 5 ஒன்றியங்களில் இருந்தும் 2000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட வர்கள்க ளுக்கு தனித்தனியே இருக்கைகள் அமைக்கபட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் எழுத்து பிழை இருந்தவர்களுக்கு உடனடியாக சரிசெய்யபட்டு திருத்தப்பட்ட பட்டாவை உரியவர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதே போன்று அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரூரில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ கீதா ராணி, தாசில்தார்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.
- கிணற்றில் பிணமாக மிதந்தார்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாவேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். வனத்துறையில் பணியாற்றி இறந்து விட்டார். இவருடைய மகன் இளமதி தமிழ்செல்வன் (25).இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த 7 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி நாசன்கொட்டாய் பகுதியில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.
அதனை அரூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரது உறவினர்கள் வந்து பார்த்தனர். அப்போது இறந்து போனது இளமதி தமிழ்செல்வன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






