என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஓ.பி.எஸ். அணி-அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பி.எஸ் அணி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினர்.
- கொடநாடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து துரிதமாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவாக தண்டனை பெற்று தர தி.மு.க.வை வலி யுறுத்தி ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அ.ம.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.
நெல்லை வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே ஓ.பி.எஸ் அணி மற்றும் அ.ம.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பி.எஸ் அணியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரம சிவன், நெல்லை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தச்சநல்லூர் பகுதி செயலாளர் சொர்ணம் வரவேற்றார்.
தொடர்ந்து கொடநாடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த தி.மு.க. அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆவின் அண்ணசாமி, துவரை பேச்சிமுத்து, மணி மூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், ஓ.பி.எஸ். அணி இளைஞர் பாசறை செயலாளர் லெனின், அண்ணா தொழிற் சங்க செயலாளர் பாலசுப் பிரமணியன், மாணவரணி செயலாளர் செல்வ பிரதீப், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செல்வ கணபதி, மகளிர் அணி செயலாளர் தமிழ் செல்வி,
நாங்குநேரி சட்ட மன்ற தொகுதி செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், பகுதி செயலாளர்கள் நெல்லை சுப்பையா, காஜா மைதீன், ஒன்றிய செயலா ளர்கள் ராமர், டோமினிக் பாண்டி, தங்கப்பல் பரம சிவன், பொதுக்குழு உறுப்பி னர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாளை வடக்கு பகுதி செயலாளர் அருள் இம்மானுவேல் ஸ்டீபன் நன்றி கூறினார்.