என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் நாளை தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் அரசு போக்குவரத்துக் ஏ.ஐ.டி.யூ.சி சங்க நிர்வாக குழு கூட்டம்.

    தஞ்சையில் நாளை தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

    • வேலை நேர சட்ட திருத்தத்தை நிறைவேற்றி உள்ளதை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.
    • தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் சங்கத் தலைவர் மல்லி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.பொதுச் செயலாளர் அப்பாதுரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

    இந்த கூட்டத்தில் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை சட்டமன்றத்தில் 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் கூடுதலாக்கும் வேலை நேர சட்ட திருத்தத்தை நிறைவேற்றி உள்ளதை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தமிழ் மாநில குழு சார்பில் நாளை ( வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த அழைப்பை ஏற்று நாளை தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், மனோகரன், இருதயராஜ், ரெஜினால்டு ரவீந்திரன், சாந்திசுந்தரராஜ், குணசேகரன், சோமசுந்தரம், சிவகுமார், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் துணைத் தலைவர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×