என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரமடை வட்டாரக் கல்வி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
- 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் முழக்கம்
- ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மணிமலர் தலைமை தாங்கினார்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரமடை வட்டாரக் கல்வி அலுவலக வளாகத்தில் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மணிமலர் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் நாராயணசாமி வரவேற்றார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் மகேஷ்குமார், செயலாளர் கனகராஜ் , தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, வட்டார பொருளாளர் தண்டபாணி, எஸ்.புங்கம்பாளையம் தலைமை ஆசிரியர் கிரிஸ்டோபர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
இதற்கான ஏற்பாடுகளை ஒளியழகன், ரங்கநாதன் நாகராஜ், பழனிமுத்து, தங்கராஜ், கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர்.
Next Story






