என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தாயை தாக்கிய மகள்- போலீசார் விசாரணை
    X

    கோவையில் தாயை தாக்கிய மகள்- போலீசார் விசாரணை

    • வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைக்காததால் ஆத்திரம்
    • தாய் வீட்டிற்கு சென்று சரமாரி தாக்குதல்

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 53). இவரது மகள் ரேவதி (31). தாய்-மகள் இடையில் ஏற்கனவே கருத்து வேறுபாடு உள்ளது. இந்த நிலையில் சாந்தி தனது மருமகளுக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்தினார். இதற்கு அவர் ரேவதியை அழைக்கவில்லை.

    எனவே ஆத்திரம் அடைந்தவர் தாய் வீட்டிற்கு சென்று சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த சாந்திக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×