search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துமலை பகுதியில் காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் சேதம்- இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு
    X

    கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விவசாய சங்கத்தினர்.


    ஊத்துமலை பகுதியில் காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் சேதம்- இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு

    • மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாக விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
    • அதிகாரிகள் பயிர் சேதங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    தென்காசி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கண்ணையா தலைமையில் ஊத்துமலை, ராஜ கோபால பேரி, அச்சங்குட்டம், வாடியூர் மற்றும் வீராணம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வீரகேரளம் புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஊத்துமலை, ராஜகோபால பேரி மற்றும் ஆலங்குளம் சுற்றியுள்ள மலையடிவாரங்களில் காட்டுப்பன்றிகள் பெரு மளவில் உள்ளன. அவை அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    சேதம் அடைந்த பயிர்கள், நிலத்திற்கான இழப்பீடு தொகையும் இதுவரையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே காட்டுப்பன்றியை வனவிலங்கு சட்டத்திலிருந்து நீக்கவும், ஊத்துமலை பகுதிக்கு வடபுறம் போதிய மழை இல்லாமல் உளுந்து உள்ளிட்ட மானாவாரி பயிறு வகைகள் கருகி உள்ளன. எனவே வனத்துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறையை சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பயிர் சேதங்களை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கிட முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

    கிடப்பில் போடப் பட்டுள்ள ரெட்டை குளம் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கி விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை உரு வாக்கிடும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


    Next Story
    ×