என் மலர்
கடலூர்
கடலூர்:
புதுவை பனித்திட்டு கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்கி (வயது 20). இவர் புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் ராம்கி கடலூர் சுனாமி நகர் தாழங்குடா பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்தார். இரவு அங்குள்ள தனி அறையில் தூங்க சென்றார். அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராம்கியை அவரது உறவினர்கள் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ராம்கியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கி எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இருந்து அரவக்குறிச்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக செல்லும் வழியில் கடலூருக்கு வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இல்லத்தரசிகள், உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் அவதிபடுகின்றனர்.
இது அவசர கோலத்தில் அறிவித்த அறிவிப்பாகும். பொதுமக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்காக வெயிலில் காத்து நிற்கிறார்கள். இதை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.
பல வங்கிகளில் பணம் மாற்றுவதற்கு பயன்படுத்தும் விண்ணப்பம் ஆங்கிலத்தில்தான் உள்ளது. இதை கிராம மக்கள், பாமர மக்கள் எப்படி நிரப்பி பணம் பெறுவார்கள்?
மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழிகளிலேயே விண்ணப்பம் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் வைத்திருந்த நிகழ்ச்சிகளை பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பல சிரமங்களுக்கிடையில் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ரூபாய் நோட்டு நிலமைகள் 2 மாதங்களில் சரியாகும் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் வர வேற்கத்தக்கதுதான். இருந்தாலும் மக்கள் சிரமத்தை தவிர்த்து இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது பா.ஜ.க.வினருக்கு 3 மாதத்துக்கு முன்பே தெரியும் என்று கூறியுள்ளார். இதை நம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் மாநிலத்தின் முதல்வர்.
முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதற்கு 20 ஆயிரம் கோடி செலவாகும் என்று கூறியுள்ளார். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிதி நெருக்கடியில் தமிழக அரசு உள்ளதா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர். நீதிமன்ற அடிப்படை செலவுகள் மற்றும் அடிப்படை வசதிக்கு நிதித்துறை பணம் வழங்கவில்லை. இதற்கானத்தான் நீதிபதிகள் இந்த கேள்வியை கேட்டனர். இதனால் தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்துக்கு பணம் ஒதுக்க வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டம், இ.எஸ்.டி. திட்டம், உதய் திட்டம் போன்றவற்றை ஜெயலலிதா முன்பு எதிர்த்தார். தற்போது நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள தமிழக அரசு இந்த திட்டத்தை அனுமதித்துள்ளார்கள். இது ஏன்?
மத்திய அரசு தமிழக அரசுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து பல திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசு திணிக்கும் திட்டத்தை தமிழக மக்களுக்கு பயன்படும் திட்டமா? என்பதை பார்த்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புதுவை மாநிலம் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
கடலூர்:
இந்தியா முழுவதும் தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் செயல்படும் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுத்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் இன்று ஏ.டி.எம். மையங்கள் முன்பு திரண்டனர். ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படவில்லை.
கடலூர் மாவட்டத்தில் 192 வங்கிகளும், 500 ஏ.டி.எம். மையங்களும் உள்ளன. கடலூரில் இன்று காலை 10.30 மணி அளவில் மஞ்சக்குப்பம் ஸ்டேட் பாங்கி ஏ.டி.எம்.மையம், செம்மண்டலம் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம், திருப்பாதிரிபுலியூர் இந்தி யன் ஓவர்சீஸ்வங்கி ஏ.டி.எம்.மையம், அதே பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.மையம், முதுநகர் போலீஸ்நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்பட ஒருசில ஏ.டி.எம். மையங்களே செயல்படத் தொடங்கின.
அந்த ஏ.டி.எம். மையங்கள் முன்பு பொது மக்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்துநின்றனர். ஏ.டி.எம். மையத்தில் 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய்கள் வந்தன. ஒவ்வொருவரும் பணம் எடுத்து வருவதற்கு ½ மணி நேரம் ஆனது.
கடலூரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.மையங்கள் இன்று செயல்பட வில்லை. இதனால் ஏ.டி.எம்.மையங்கள் செயல்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஏ.டி.எம். மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்றனர். இதனால் வங்கிகளிலும் கூட்டம் அலை மோதியது.
தபால் அலுவலகத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் கடலூரில் உள்ள தபால் நிலையங்களுக்கு பொதுமக்கள் சென்றனர். இதனால் அங்கு பணத்தை மாற்ற முடியவில்லை.
ரிசர்வ் வங்கியில் இருந்து தங்களுக்கு பணம் வர வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை மகாவீர் நகரைச் சேர்ந்தவர் எர்னோஸ்ட் ஜெயக்குமார் (வயது 34). சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஜெயப்பிரியா (30). இவர் சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கணவன்-மனைவி இருவரும் நேற்று வேலைக்கு சென்று விட்டனர். மதியம் சாப்பிடுவதற்காக எர்னோஸ்ட் ஜெயக்குமார் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை, ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்து அண்ணாமலை நகர் போலீசில் எர்னோஸ்ட் ஜெயக்குமார் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை தேடிவருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 147.5 அடி ஆகும். ஏரியின் நீர் மூலம் 48 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமாக வீராணம் ஏரி இருக்கிறது.
பருவமழை சரிவர பெய்யாததாலும், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 310 கன அடியாக குறைந்துவிட்டது. இதனால் ஏரி வறண்டு காணப்படுகிறது.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. ஏரி வறண்டுள்ளதால் குடிநீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சேர்ந்தவர் செல்வமேரி (வயது 38). இவர் அந்த பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் செல்வமேரி வேலை சம்பந்தமாக பண்ருட்டியை அடுத்த மணம்தவழ்ந்தபுத்தூர் பகுதிக்கு வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அன்பழகன் மற்றும் அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சரளா, கவுசல்யா, நந்தினி ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அன்பழகன் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரும் சேர்ந்து செல்வமேரியிடம் உங்கள் தொண்டு நிறுவனத்துக்கு நாங்கள் பல கோடி ரூபாய் லோன் வாங்கி தருகிறோம் என்று கூறினர். இதற்கு நீங்கள் முன்பணமாக ரூ.7½ லட்சம் கொடுக்க வேண்டும் என்று 4 பேரும் கூறினர்.
இதை நம்பிய செல்வமேரி 3 தவணையாக ரூ.7½ லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். நாட்கள் பல ஆகியும் அவர்கள் 4 பேரும் செல்வமேரிக்கு சொன்னபடி லோன் வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த செல்வமேரி அன்பழகன் உள்பட 3 பேரிட மும், நீங்கள் சொன்னபடி இதுவரை எனக்கு லோன் வாங்கி தரவில்லை. அதனால் நான் ஏற்கனவே உங்களிடம் கொடுத்துள்ள ரூ.7½ லட்சத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் செல்வ மேரியை தகாதவார்த்தைகளால் திட்டி அனுப்பினர். நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை செல்வமேரி உணர்ந்தார். இது குறித்து செல்வமேரி கடலூர் போலீஸ் சூப்பிரண்டிடம் அன்பழகன், சரளா, கவுசல்யா, நந்தினி ஆகிய 4 பேர் மீது புகார் கொடுத்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டார். அவரது அறிவுறுத்தலின்படி புதுப்பேட்டை போலீசார் அன்பழகன், சரளா, கவுசல்யா, நந்தினி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சேர்ந்தவர் செல்வமேரி (வயது 38). இவர் அந்த பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் செல்வமேரி வேலை சம்பந்தமாக பண்ருட்டியை அடுத்த மணம்தவழ்ந்தபுத்தூர் பகுதிக்கு வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அன்பழகன் மற்றும் அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சரளா, கவுசல்யா, நந்தினி ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அன்பழகன் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரும் சேர்ந்து செல்வமேரியிடம் உங்கள் தொண்டு நிறுவனத்துக்கு நாங்கள் பல கோடி ரூபாய் லோன் வாங்கி தருகிறோம் என்று கூறினர். இதற்கு நீங்கள் முன்பணமாக ரூ.7½ லட்சம் கொடுக்க வேண்டும் என்று 4 பேரும் கூறினர்.
இதை நம்பிய செல்வமேரி 3 தவணையாக ரூ.7½ லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். நாட்கள் பல ஆகியும் அவர்கள் 4 பேரும் செல்வமேரிக்கு சொன்னபடி லோன் வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த செல்வமேரி அன்பழகன் உள்பட 3 பேரிடமும், நீங்கள் சொன்னபடி இதுவரை எனக்கு லோன் வாங்கி தரவில்லை. அதனால் நான் ஏற்கனவே உங்களிடம் கொடுத்துள்ள ரூ.7½ லட்சத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் செல்வ மேரியை தகாதவார்த்தைகளால் திட்டி அனுப்பினர். நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை செல்வமேரி உணர்ந்தார். இது குறித்து செல்வ மேரி கடலூர் போலீஸ் சூப்பிரண்டிடம் அன்பழகன், சரளா, கவுசல்யா, நந்தினி ஆகிய 4 பேர் மீது புகார் கொடுத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டார். அவரது அறிவுறுத்தலின்படி புதுப்பேட்டை போலீசார் அன்பழகன், சரளா, கவுசல்யா, நந்தினி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து வேப்பூருக்கு நேற்று இரவு கார் புறப்பட்டது. காரில் 2 பேர் இருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் கார் விருத்தாசலம் அருகே விளாங்காட்டூர் பகுதியில் வந்துகொண்டிருந்தது.
திடீரென்று கார் நிலைதடுமாறி தாறு மாறாக ஓடி சாலையோர மரத்தில் மோதியது.
மரத்தில் மோதிய வேகத்தில் காரில் தீப்பிடித் தது. சிறிது நேரத்தில் அந்த தீ கார் முழுவதும் பரவியது. காரில் இருந்தவர்கள் காரை திறந்து வெளியே வர முயன்றனர். அவர் களால் வெளியே வர முடியவில்லை. அவர்கள் உடலில் தீப்பற்றியது.
சிறிது நேரத்தில் காரில் இருந்த 2 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அந்த வழியாக சென்ற சிலர் கார் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். ½ மணி நேரம் போராடி காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். தீ பற்றி எரிந்ததால் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
தீயில் கருகி பிணமான 2 பேரின் உடல்களும் எலும்புகூடுகளாக காட்சி அளித்தன.
சம்பவ இடத்துக்கு விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்தனர். காருக்குள் கரிக்கட்டையாக கிடந்த 2 பேரின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீயில் கருகி இறந்த 2 பேரும் யார்? அவர்களுக்கு எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
போலீசாரின் தொடர் விசாரணையில் விபத்தில் சிக்கிய கார் சென்னை அண்ணாநகர் வ.உ.சி.நகர் கிழக்கு நியூகாலனி முதலாவது தெருவைச் சேர்ந்த ஆண்டியாப்பிள்ளை மகன் முத்துவேலுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. காரின் எண். டி.என்.04.ஏ.பி.7837 ஆகும்.
இதையொட்டி சென்னையில் உள்ள முத்துவேலு குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பிறகுதான் காரில் பயணம் செய்தவர்கள் யார் என்பது தெரியவரும்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிறகிழந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 37). இவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அம்சவல்லி (33) என்ற மனைவியும், புவனேஷ் (6), யோகேஷ் (3) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
லட்சுமணனின் தம்பி இளவரசன் (32) திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். இளவரசனின் நண்பர் அதே பகுதியை சேர்ந்த காளிரத்தினம் (23) அடிக்கடி லட்சுமணன் வீட்டுக்கு வந்து செல்வார். வீட்டு வேலைகளையும் செய்து கொடுப்பார்.
இதனால் அம்சவல்லிக்கும், காளிரத்தினத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு அம்சவல்லி வழக்கம்போல தனது குழந்தைகளுடன் ஒரு அறையில் படுத்து தூங்கினார். மற்றொரு அறையில் அவரது மாமியார் மீனாட்சி (57) படுத்திருந்தார். இரவு 11 மணியளவில் தோட்டத்துக்கு செல்வதற்காக எழுந்த மீனாட்சி மின் விளக்கை போட்டார். அப்போது அம்சவல்லியும், அவரது கள்ளக்காதலன் காளிரத்தினமும் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் 2 பேரையும் கண்டித்தார்.
இதுபற்றி வெளிநாட்டில் இருக்கும் தனது மகன் லட்சுமணனிடமும் தெரிவிப்பதாக அவர் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காளிரத்தினம் மீனாட்சியை கீழே பிடித்து தள்ளியதில் அவர் மயங்கி விழுந்தார். மீனாட்சியை இப்படியே விட்டால், கள்ளக்காதல் விவகாரம் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் அவரை கொலை செய்ய 2 பேரும் முடிவு செய்தனர்.
மீனாட்சியின் இரு கால்களையும் அம்சவல்லி பிடித்துக்கொள்ள, காளிரத்தினம் வீட்டில் இருந்த அம்மிக்குழவியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து நசுக்கினார். சத்தம் கேட்காமல் இருப்பதற்காக டி.வி.யை சத்தமாக வைத்தனர். இந்த சத்தம் கேட்டு அம்சவல்லியின் மகன் புவனேஷ் விழித்து எழுந்து அழுதான். அம்சவல்லி அவனை சமாதானப்படுத்தினார். அவன் கண் எதிரே மீனாட்சியை இருவரும் துடிதுடிக்க கொலை செய்தனர்.
மீனாட்சி இறந்ததும் காளிரத்தினம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கொலையை மறைப்பதற்காக அம்சவல்லி அக்கம்பக்கத்தினரிடம் மாமியார் மீனாட்சி நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக கூறினார். வெளியூரில் உள்ள உறவினர்களுக்கு போன் மூலமாகவும் தகவல் கொடுத்து நம்பவைத்தார்.
தாய் இறந்தது பற்றி அறிந்த இளவரசன் திருப்பூரில் இருந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் இருந்த சில அறிகுறிகளும், மீனாட்சியின் கழுத்தில் இருந்த காயமும் அவருக்கு தாயின் சாவில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து குமராட்சி போலீஸ் நிலையத்தில் இளவரசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்சவசல்லியையும், காளிரத்தினத்தையும் பிடித்து விசாரித்தனர்.
ஆனால் அவர்கள் தாங்கள் கொலை செய்யவில்லை என மறுத்தனர். இதையடுத்து அம்சவல்லியின் மகன் புவனேசை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவன் அம்சவல்லியும், காளிரத்தினமும் சேர்ந்து தனது பாட்டியை கொலை செய்ததாக கூறினான். அதன்பின்னர் அம்சவல்லியும், காளிரத்தினமும் மீனாட்சியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சிறுவன் புவனேஷ் கோர்ட்டிலும் சாட்சி அளித்தான். இந்த வழக்கில் நேற்று அம்சவல்லி, அவரது கள்ளக்காதலன் காளிரத்தினம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இருவரையும் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்துக்கும் மணிமுக்தாறுக்குமிடையே சாலையோரம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் கையில் காயம் காணப்படுகிறது.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வேப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பிணமாக கிடந்த வாலிபர் பேண்ட் மற்றும் டி-சர்ட் அணிந்திருந்தார். அந்த வாலிபர் வடமாநில வாலிபராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடலில் காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வாகனங்கள் மோதி இறந்தாரா? என்று தெரியவில்லை. பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும். வாலிபர் சாலையோரம் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் துறைமுகம் சுனாமி நகரை சேர்ந்தவர் பொற்செழியன். இவரது மனைவி பிரவீனா. இவர்களது மகன் பிரதாப்(வயது 15). கடலூர் கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை பிரவீனாவும், பிரதாப்பும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். டாக்டர்களிடம் நகராட்சி பள்ளி ஆசிரியர் தாக்கியதால் பிரதாப்புக்கு காது கேட்கவில்லை. அவனுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பிரவீனா கூறினார்.
இதையடுத்து டாக்டர்கள் மாணவர் பிரதாப்பை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரவீனா நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மகன் பிரதாப் நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 3-ந் தேதி மழை பெய்தது. அவனது பள்ளி சீருடை நனைந்து விட்டதால் எனது மகன் சீருடை அணியாமல் வேறு உடை அணிந்து பள்ளிக்கு சென்றான்.
அப்போது உடற்கல்வி ஆசிரியர் அவனிடம் ஏன் சீருடை அணியாமல் வந்தாய்? என்று கேட்டு பரீட்சை எழுதும் அட்டையால் தலையில் தாக்கியுள்ளார். மேலும் கன்னத்திலும் அறைந்திருக்கிறார். இதையடுத்து பிரதாப் அன்று இரவு 7 மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான். வீட்டின் அருகே மயங்கி விழுந்து விட்டான்.
உடனே அவனை கடலூர் முதுநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு காதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
பின்னர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து காட்டினோம். பிரதாப்புக்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். பிரதாப்புக்கு 85 சதவீதம் காதுகேட்கும் திறன் குறைந்துள்ளது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மீனவர் அமைப்பை சேர்ந்தவர்களுடன் நகராட்சி பள்ளிக்கு சென்று நியாயம் கேட்டேன். அப்போது ஆசிரியர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சரியாக ஸ்கேன் எடுத்து பார்த்திருக்கமாட்டார்கள்.
தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்து பாருங்கள் என்று கூறி ரூ.5 ஆயிரம் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்டு நான் தனியார் ஆஸ்பத்திரியில் பிரதாப்புக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தேன். அப்போது டாக்டர்கள் பிரதாப்புக்கு காது கேட்கும் திறன் குறைந்து விட்டது என்று உறுதியாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய சென்றேன். ஆனால் போலீசார் புகார் மனுவை வாங்க மறுத்தனர்.
நகராட்சி பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.5 ஆயிரம் பெற்றுக்கொண்டு பிரச்சனையை நாங்கள் பேசி முடித்துவிட்டதாக போலீசார் எங்களிடம் தெரிவித்தனர். நான் அவர்களிடம் சிகிச்சைக்காக தான் ரூ.5 ஆயிரம் பெற்றேன்.
பிரச்சனை பேசி முடிக்கப்படவில்லை என்று கூறினேன். ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை.
இதையடுத்து ரூ.5 ஆயிரம் பணத்தை திரட்டி மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் நகராட்சி பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் பணத்தை கொடுக்க முயன்றேன். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. எனக்கு அங்கு நியாயம் கிடைக்கவில்லை.
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக என் மகனை சேர்த்துள்ளேன். என் மகனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள குடுமியான்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது தந்தை பெருமாள்(வயது 87). விவசாயி. இவரும் இவரது மனைவி வள்ளியம்மையும்(80) குடுமியான்குப்பத்தில் உள்ள தனது மகள் பார்வதி வீட்டுக்கு நேற்று மதியம் சாப்பிட சென்றனர்.
அங்கு அவர்கள் மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டனர். மேலும் பார்வதி அவரது கணவர் நாராயணசாமி, உறவினர்கள் இந்திரா, நாகம்மாள் ஆகியோரும் மீன் குழம்பு சாப்பிட்டனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் பெருமாள் உள்பட 6 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இரவு 11 மணி அளவில் பெருமாள் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து பார்வதி, இந்திரா, நாராயணசாமி ஆகியோர் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக் கும், வள்ளியம்மை, நாகம்மாள் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. கடலூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஒருவர் கொண்டுவந்த 2½ கிலோ எடையுள்ள கடல் மீனை வாங்கி அதில் உள்ள முட்டையை வறுத்து பெருமாள் உள்பட 6 பேரும் சாப்பிட்டுள்ளனர்.
அது ஜீரணம் ஆகாததால் 6 பேருக்கும் வாந்தி - மயக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






