என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே வறுத்த மீன் முட்டை சாப்பிட்ட விவசாயி உயிரிழப்பு
    X

    பண்ருட்டி அருகே வறுத்த மீன் முட்டை சாப்பிட்ட விவசாயி உயிரிழப்பு

    பண்ருட்டி அருகே வறுத்த மீன் முட்டை சாப்பிட்ட விவசாயி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள குடுமியான்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது தந்தை பெருமாள்(வயது 87). விவசாயி. இவரும் இவரது மனைவி வள்ளியம்மையும்(80) குடுமியான்குப்பத்தில் உள்ள தனது மகள் பார்வதி வீட்டுக்கு நேற்று மதியம் சாப்பிட சென்றனர்.

    அங்கு அவர்கள் மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டனர். மேலும் பார்வதி அவரது கணவர் நாராயணசாமி, உறவினர்கள் இந்திரா, நாகம்மாள் ஆகியோரும் மீன் குழம்பு சாப்பிட்டனர்.

    சாப்பிட்ட சிறிது நேரத்தில் பெருமாள் உள்பட 6 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இரவு 11 மணி அளவில் பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து பார்வதி, இந்திரா, நாராயணசாமி ஆகியோர் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக் கும், வள்ளியம்மை, நாகம்மாள் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. கடலூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஒருவர் கொண்டுவந்த 2½ கிலோ எடையுள்ள கடல் மீனை வாங்கி அதில் உள்ள முட்டையை வறுத்து பெருமாள் உள்பட 6 பேரும் சாப்பிட்டுள்ளனர்.

    அது ஜீரணம் ஆகாததால் 6 பேருக்கும் வாந்தி - மயக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×