என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கடலூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

    கடலூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    புதுவை பனித்திட்டு கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்கி (வயது 20). இவர் புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ராம்கி கடலூர் சுனாமி நகர் தாழங்குடா பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்தார். இரவு அங்குள்ள தனி அறையில் தூங்க சென்றார். அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராம்கியை அவரது உறவினர்கள் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ராம்கியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கி எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×