என் மலர்
கடலூர்
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள மேல மூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் பாலமுருகன் (வயது 16). சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
வழக்கம்போல் இன்று காலை பாலமுருகன் பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் இறைவணக்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து அவரவர் வகுப்புகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று பாலமுருகன் சுருண்டு விழுந்தார். ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பாலமுருகனை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பால முருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சிதம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அம்மைநோய் பாதிப்பால் பாலமுருகன் இறந்தது தெரியவந்தது.
மாணவர் பாலமுருகன் பள்ளி வளாகத்தில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர் மரணத்தை தொடர்ந்து இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. மழை நீர் வயலில் தேங்கி பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் மனம் உடைந்து பலியாவது தொடர்ந்து நடந்து வருகிறது.
காட்டு மன்னார் கோவிலில் சுந்தரகண்ணு என்ற விவசாயி மழையில் உளுந்து பயிர் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். சேத்தியா தோப்பில் காசிநாதன் என்ற விவசாயி நெற்பயிர்கள் சேதம் அடைந்ததை பார்த்து அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்
இந்த நிலையில் பெண்ணாடம் அருகே மேலும் ஒரு விவசாயி மயங்கி விழுந்து இறந்துள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணாடம் அருக உள்ள வடகரையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் பயிரிட்டிருந்தார். இதற்காக கூட்டுறவு சங்கத்தில் ரூ. 33 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். நெற் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெண்ணாடம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ராஜேந்திரனின் வயலில் தண்ணீர் தேங்கியது. நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து சேதம் அடைந்தன.
இன்று காலை வயலுக்கு வந்த ராஜேந்திரன் நெற்பயிர்கள்சாய்ந்த கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நெல் அறுவடைசெய்ய முடிமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதே. விவசாயத்துக்காக வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்துவேன் என்று கண்ணீர் சிந்தினார். சிறிது நேரத்தில் அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். ராஜேந்திரனை மீட்டு பெண்ணாடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர்.
இறந்த ராஜேந்திரனுக்கு திலகவதி என்ற மனைவியும் பிரியா (20), பிரியங்கா (18), பிரியதர்ஷனி (14) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜேந்திரன்உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விராட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் தெய்வக்கண்ணு. இவர் இறந்து விட்டார். இதையடுத்து இவரது மகன் ஞானபிரகாசம் (வயது 30). வாரிசு சான்றிதழ் கேட்டு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அவரது மனு விசாரணைக்காக நெய்வேலி அருகே உள்ள பெரியகாப்பான்குளம் கிராம நிர்வாக அதிகாரி தாமோதரனிடம் (41) வந்தது. அவர் அந்த மனுவை வருவாய் ஆய்வாளருக்கு பரிந்துரை செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் தருமாறு ஞானபிரகாசத்திடம் கேட்டார். இதுபற்றி ஞானபிரகாசம் கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரியை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கிராம நிர்வாக அதிகாரி தாமோதரனிடம் ஞானபிரகாசம் ரூ.2 ஆயிரத்தை வழங்கினார். அதை தாமோதரன் வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணைக்குப்பின் தாமோதரனை கடலூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார். இதையடுத்து தாமோதரன் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான தாமோதரன் கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார் என்று கூறப்படுகிறது.
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி நேற்று மாலை சிறை அதிகாரிகள் ஒவ்வொரு அறையாக அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். அப்போது மத்திய சிறையில் 2-ம் தொகுதி பிரிவில் சோதனை செய்தபோது, அந்த பகுதியில் மண்ணில் ஏதோ புதைந்திருந்தது தெரியவந்தது. சந்தேகமடைந்த போலீசார் அதை தோண்டி பார்த்தனர். அதில் செல்போன் இருந்தது தெரியவந்தது.
அது யாருடைய செல்போன் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா தளவாய் பட்டினத்தை சேர்ந்த அஜ்மீர்கான் (வயது 31), என்ற ஆயுள்தண்டனை கைதி. தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் தாலுகா இருளாச்சி பகுதியை சேர்ந்த ஜாபர்அலி என்ற சேட் என்ற கைதியும் சேர்ந்து செல்போனை பயன்படுத்தியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அஜ்மீர்கான் மற்றும் ஜபர்அலியிடம் போலீ ர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிறைசாலை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மேலசொரத்தூர் அருகே உள்ள மூலக்கரையை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது உறவினர் முருகேசன் ஆகிய 2 பேரும் சேர்ந்து செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.
இவர்கள் அந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து திட்டக்குடிக்கு கொண்டு செல்வதற்காக இன்று காலை விருத்தாசலம் வேட்டக்குடி அருகே ஆடுகளை ஓட்டி சென்றனர்.
அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆட்டு மந்தைக்குள் புகுந்தது. இதில் ஆடுகள் அங்கும் இங்குமாக பயங்கர சத்தத்துடன் கலைந்து ஓடின. எனினும் லாரியின் சக்கரத்தில் சிக்கி 40 ஆடுகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தன. ஆடுகளை காப்பாற்றும் முயற்சியில் முருகேசன் ஈடுபட்டபோது லாரி அவர் மீதும் மோதியது.
இதில் முருகேசன் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விருத்தாசலம் வருவாய்துறையினரும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த விபத்தால் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
ஸ்ரீமுஷ்ணம்:
தென்மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி நேற்று காலை முதல் கடலூர் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் கனமழை கொட்டியது.
இந்த மழை இன்று காலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதனால் ஸ்ரீமுஷ்ணத்தில் முக்கிய சாலை மற்றும் தெருக்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்தது. வீட் டிற்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் வெளியேற்றிய வண்ணம் இருந்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.
இதேபோல் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கானூர், பேரூர், நகரபாடி, ஏத்தனூர், ராஜேந்திரபட்டிணம் உள்பட 30 கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழையால் அந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது, தண்ணீர் இல்லாமல் வறட்சியாக இருந்த காலத்திலும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி நெற்பயிர்களை வளர்த்தோம். தற்போது பெய்த மழையால் அவற்றை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது என்றனர்.
கடலூர் கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் முத்துக்குமரன்(வயது 10). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். தனது பாட்டி பார்வதி வீட்டில் தங்கியிருந்து தினமும் பள்ளிக்கு சென்று வந்தான்.
கடந்த 24-ந் தேதி முத்துக்குமரன் வீட்டில் இருந்தான். அப்போது அவன் சட்டைப்பையில் ரூ.200 இருந்தது. அந்த பணம் எப்படி? வந்தது என்று முத்துக்குமரனிடம் பார்வதி கேட்டார்.
அதற்கு அவன் மாமா சட்டைப்பையில் இருந்து அந்த பணத்தை எடுத்தேன் என்று கூறினான். இதனால் பார்வதி கோபமடைந்து அவனை திட்டினார்.
இதுகுறித்து மாமாவிடம் சொல்வேன் என்று கூறினார். இதை கேட்டு மனமுடைந்த முத்துக்குமரன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டான். இதில் அவன் உடல் கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனிக்காமல் முத்துக்குமரன் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விருத்தாசலம் அருகே உள்ளது வயலூர். இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவு முதல் இந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழை தண்ணீர் கழிவுநீர் வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மழை நீர் வீட்டிற்குள் புகுந்து விடும் சூழ்நிலை உருவானது.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சரிவர தூர்வாராப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ரோடுகளில் தேங்கும் மழை நீர் கழிவுநீர் வாய்க்கால் வழியாக செல்லாமல் ஆங்காங்கே குளம் போல் தேங்கி உள்ளது.
இந்த பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதை கேட்ட போலீசார் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.
இளைஞர்கள் நடத்திய இந்த அறப்போராட்டம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். கடைசி நாள் போராட்டத்தில் சமூக விரோதிகளால் பிரச்சனை ஏற்பட்டது.
எனவே எதிர்காலத்தில் சமூக விரோதிகளை வெளியேற வைத்து நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் காக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் இணைந்து ஒத்துழைத்தது மிகவும் மகிழ்ச்சி.
தற்போது நாடு முன்னேற்றப்பாதையில் செல்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும், இளைஞருக்கும் வேலை கிடைக்க வேண்டும். இதற்காக அவர்கள் தங்களது திறமையை வளத்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் நடத்திய போராட்டம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள எம்.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராயர் (வயது 51), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாலகுமார் மற்றும் அவரது தம்பி விஜயன் ஆகிய 2 பேரும் ராயரின் வீட்டிற்கு சென்று தகாதவார்த்தைகளால் திட்டினர்.
இதை தட்டிக்கேட்ட ராயருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி பாலகுமார் மற்றும் விஜயன் ஆகிய 2 பேரும் ராயரை சரமாரியாக தாக்கினர். அவரது வீட்டில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த ராயரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராயர் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாலகுமாரை கைது செய்தனர். விஜயனை வலைவீசி தேடி வருகின்றனர்.
தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாதர் வலம் வரும் நிகழச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய கைங்கர்ய சபை தலைவர் பன்னீர்செல்வம், செயல் அலுவலர் ராஜாசரவணகுமார், உற்சவதாரர்கள், விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.
முன்னதாக இன்று பகல் 12 மணியளவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் எதிரில் உள்ள தனக்கோடி அம்மாள் திருமண மண்டபத்தில் 63 நாயன்மார்கள் பிரதோஷ வழிபாடு மன்றத்தின் சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகைக்கடை அதிபரும், பண்ருட்டி செந்தமிழ் சங்க தலைவருமான எஸ்.வி. ஜூவல்லர்ஸ் அதிபர் வைரக்கண்ணு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். பிரதோஷ வழிபாடு மன்ற தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.






