என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் மத்திய சிறையில் செல்போன் பறிமுதல்: 2 கைதிகளிடம் விசாரணை
    X

    கடலூர் மத்திய சிறையில் செல்போன் பறிமுதல்: 2 கைதிகளிடம் விசாரணை

    கடலூர் மத்திய சிறையில் செல்போன் பறிமுதல் செய்த போலீசார் 2 கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிறைசாலை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர்.

    அதன்படி நேற்று மாலை சிறை அதிகாரிகள் ஒவ்வொரு அறையாக அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். அப்போது மத்திய சிறையில் 2-ம் தொகுதி பிரிவில் சோதனை செய்தபோது, அந்த பகுதியில் மண்ணில் ஏதோ புதைந்திருந்தது தெரியவந்தது. சந்தேகமடைந்த போலீசார் அதை தோண்டி பார்த்தனர். அதில் செல்போன் இருந்தது தெரியவந்தது.

    அது யாருடைய செல்போன் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா தளவாய் பட்டினத்தை சேர்ந்த அஜ்மீர்கான் (வயது 31), என்ற ஆயுள்தண்டனை கைதி. தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் தாலுகா இருளாச்சி பகுதியை சேர்ந்த ஜாபர்அலி என்ற சேட் என்ற கைதியும் சேர்ந்து செல்போனை பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அஜ்மீர்கான் மற்றும் ஜபர்அலியிடம் போலீ ர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிறைசாலை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×