என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் இன்று மாலை பிரதோ‌ஷ வழிபாடு
    X

    திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் இன்று மாலை பிரதோ‌ஷ வழிபாடு

    திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் பிரதோ‌ஷ வழிபாட்டை முன்னிட்டு இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசே‌ஷ பூஜை ஆகியவை நடைபெறுகிறது.
    திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் பிரதோ‌ஷ வழிபாடு இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை 4 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசே‌ஷ பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ரி‌ஷப வாகனத்தில் பிரதோ‌ஷ நாதர் வலம் வரும் நிகழச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய கைங்கர்ய சபை தலைவர் பன்னீர்செல்வம், செயல் அலுவலர் ராஜாசரவணகுமார், உற்சவதாரர்கள், விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.

    முன்னதாக இன்று பகல் 12 மணியளவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் எதிரில் உள்ள தனக்கோடி அம்மாள் திருமண மண்டபத்தில் 63 நாயன்மார்கள் பிரதோ‌ஷ வழிபாடு மன்றத்தின் சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகைக்கடை அதிபரும், பண்ருட்டி செந்தமிழ் சங்க தலைவருமான எஸ்.வி. ஜூவல்லர்ஸ் அதிபர் வைரக்கண்ணு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். பிரதோ‌ஷ வழிபாடு மன்ற தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
    Next Story
    ×