search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இன்று 1,515 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
    X

    கோவையில் இன்று 1,515 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

    • தமிழகத்திலும் தொற்று தற்போது 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
    • கோவை மாவட்டத்தில் 1.35 லட்சம் பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் குறைந்த தொற்று தற்போது 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    இதையடுத்து ெகாரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அரசு சாா்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இரண்டாம் தவணை பெற்று 9 மாதங்கள் நிறைவடைந்த முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், 75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, கோவை மாவட்டத்தில் 1.35 லட்சம் பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 32-வது கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் கோவை மாவட்டத்தில் 1,515 இடங்களில் இன்று நடைபெற்றது. கிராமப்புறங்களில் 1081 இடங்களிலும், மாநகரில் 325 இடங்களிலும், நகராட்சிகளில் 109 இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டது.

    இந்த முகாம்களை பயன்படுத்திக் கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமிற்கு வந்த மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

    Next Story
    ×