search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் காங்கிரசார் கருப்பு கொடி போராட்டம்
    X

    மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்.

    கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் காங்கிரசார் கருப்பு கொடி போராட்டம்

    • ராகுல்காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு
    • நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் கருப்பு கொடி போராட்டம்.

    நெல்லை:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை டவுன் ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று வந்தார்.

    அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் கொக்கிரகுளம் கட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    இதையறிந்த உதவி கமிஷனர்கள் அண்ணா–துரை, விவேகானந்தன், பாளை இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் விரைந்து சென்று கருப்பு கொடியை அகற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×