என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 4 மாதங்களாக சம்பளம் தராததை கண்டித்து கோஷம்
    • கூலித்தொழிலாளிகள் உள்பட காங்கிரசார் பங்கேற்பு

    கோவை,

    கோவை எஸ்.எஸ். குளத்தில் உள்ள கனரா வங்கி முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் பச்சை முத்து, கவுன்சிலரும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவருமான ஜி. வி. நவீன் குமார் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த பெண்கள் உள்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×