search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள்- செயல்பாடு குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    கும்பகோணம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் கட்டுமான பணிகள் ஆய்வு.
    • கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எடை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கும்பகோணம் ஒன்றியம் திருவலச்சுழி ஊராட்சியில் தஞ்சாவூர் -கும்பகோணம் இடையே தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் தார் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறித்தும், பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பாதுகாப்பாக வை க்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலகொற்கை ஊராட்சி யில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தில் கட்டுமான பணிகள் குறித்தும், பொது விநியோகத் திட்ட அங்காடியில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.

    கொற்கை ஊராட்சி புதுச்சேரியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எடை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின்போது கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×