search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூலாங்குளம் தொழிற்சாலையில் கலெக்டர் ஆய்வு
    X

    பூலாங்குளம் தொழிற்சாலையில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்த காட்சி.

    பூலாங்குளம் தொழிற்சாலையில் கலெக்டர் ஆய்வு

    • சாரல் அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை மத்திய, மாநில அரசு மானியத்தில் இயங்கி வருகிறது.
    • கலெக்டர் ரவிச்சந்திரன் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில், மத்திய, மாநில அரசு மானியத்தில் சாரல் அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையை புதிய தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவதற்காக அதன் நிர்வாக இயக்குனர் கே.ஆர். பால்துரை தலைமையில் பங்குதாரர்கள், தென்காசி கலெக்டரை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

    இந்நிலையில் கலெக்டர் ரவிச்சந்திரன் அந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தவிட்டில் இருந்து எண்ணெய் தயாரிக்கும் முறைகள் குறித்தும், புதிய தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் கே.ஆர். பால்துரை, பங்குதாரர்கள் வெண்ணிநாடார், ராஜன், தொழில்மைய மேலாளர் மாரியம்மாள் மற்றும் கே.ஆர்.பி. இளங்கோ, சஜனா, பரமசிவன், அலுவலர்கள் சேகர், தட்சணா மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×