search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை: தனியார் நிறுவன ஊழியர் கொலையில் 3 வாலிபர்கள் திருப்பூர் போலீசில் சரண்
    X

    கொலையான மாயாண்டி.

    நெல்லையில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை: தனியார் நிறுவன ஊழியர் கொலையில் 3 வாலிபர்கள் திருப்பூர் போலீசில் சரண்

    • மாயாண்டி வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • கருப்பந்துறை ரோட்டில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து ஓடஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    நெல்லை:

    நெல்லை மேலப் பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 36). இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    கொலை

    இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். குறுக்குத்துறையை கடந்து கருப்பந்துறை ரோட்டில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து ஓடஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், சந்திப்பு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக நெல்லை ஐகிரவு ண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்விரோதம்

    இந்த கொலை தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணை யில் மாயாண்டிக்கும், அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயாண்டியின் வீட்டு முன்பு இருந்த கிரைண்டரை அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(20) என்பவர் தூக்கி புதருக்குள் வீசி விட்டனர். இதனால் மாயாண்டி கோபத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை கண்ணனின் தந்தை சுடலை, மாயாண்டி வசிக்கும் தெரு வழியாக சுக்கு காபி வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது மாயாண்டி அவரிடம் கிரை ண்டர் திருட்டு போனது குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கண்ணனிடம் பேசி கண்டிக்குமாறு கூறியுள்ளார். உடனே சுடலையும் சம்மதம் தெரி வித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

    தொடர்ந்து அவர் தனது வீட்டுக்கு சென்று தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவில் மாயாண்டியை கொலை செய்தது தெரியவந்தது. அதேநேரத்தில் கொலையை செய்துவிட்டு அடுத்த நிமிடத்திலேயே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து பஸ்சில் திருப்பூருக்கு இரவோடு இரவாக புறப்பட்டு சென்றுவிட்டனர்.

    அங்குள்ள தாராபுரம் போலீஸ் நிலையத்தில் கண்ண னும், அவரது 2 நண்பர்களும் சரண் அடைந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அழைத்து வருவதற்காக தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். ஆனால் கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் தந்தை பலவேசம், கண்ணன் உள்பட வேறு 3 நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளதால் சரண் அடைந்த 3 பேரையும் அழைத்து வந்து விசாரித்தால் மட்டுமே மேற்கொண்டு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கி டையே மாயாண்டி யின் உடலை பெற்று க்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரி வித்துள்ளனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×