என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருதூர் பஞ்சாயத்து பெண் தலைவர் மீது வழக்கு
- 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதாக பூர்ணிமா ரங்கராஜன் மீது புகார் எழுந்தது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
காரமடை ஒன்றியத்தில் மருதூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக பூர்ணிமா ரங்கராஜன் (40) என்பவர் உள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதாக இவர்கள் மீது புகார் எழுந்தது. இந்த புகார்கள் பற்றி பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக விசாரித்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வாய்ப்பு பெற்ற பயனாளிகள் அனைவரது பட்டியலையும் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில், 100 நாள் திட்டத்தில் மோசடி நடந்திருப்பதும், ஊராட்சி தலைவர் பூர்ணிமா பலன் பெற்றிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
Next Story






