என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் இருந்து பிற்பகல் நேரத்தில் உடன்குடிக்கு பஸ்கள் இயக்க வேண்டும்- பயணிகள் கோரிக்கை
- நெல்லையில் இருந்து உடன்குடிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு பஸ் இயக்கப்படுகிறது.
- புதிய பஸ் நிலையத்தில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை.
நெல்லை:
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், மெஞ்ஞானபுரம் வழியாக உடன்குடிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில்அதிகமான மக்கள் விரும்பி பயணம் செய்கிறார்கள்.
உடன்குடி, மெஞ்ஞான புரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நெல்லைக்கு செல்லும் போதும் நெல்லை, பாளை, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து உடன்குடி பகுதிக்கு வருபவர்களும் இந்த வழித்தட பயணத்தை தான் அதிகமாக விரும்புகின்றனர்.
அதனால் நெல்லையில் இருந்து உடன்குடிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தவறாமல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் நண்பகல் நேரத்தில் ஓட்டு னர்கள், நடத்துனர்கள் மாறுவதால் சில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
உடன்குடியில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீவை குண்டத்தில் திரும்புகிறது. நெல்லையில் இருந்து புறப் படும் பஸ் ஸ்ரீவைகுண்டத் தில் திரும்புகிறது. இதனால் நெல்லை புதிய பஸ் நிலை யத்தில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை.
இதை நம்பி காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படு கின்றனர். இதனால் நண்பகல் நேரத்தில் சுமார் 3 மணி நேரம் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அவல நிலையை போக்கவும், நண்பகலில் இடைப்பட்ட நேரத்தில் ஒரு அரசு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுபற்றி பயணி ஒருவர் கூறியதாவது:-
பிற்பகல் நேரத்தில் 3 மணி நேரம் நெல்லை-உடன்குடிக்கு பஸ் போக்கு வரத்து தடை செய்தால் பயணிகள் சார்பில் உடன் குடியில் பஸ்களை சிறை பிடிக்கும் போராட்டம் நடை பெறும் என்று கூறினார்.






