search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி -கூட்டாம்புளி வழியாக ராமேஸ்வரத்திற்கு பஸ் வசதி வேண்டும்- கனிமொழி எம்.பி.யிடம்  பொதுமக்கள் கோரிக்கை
    X

    தூத்துக்குடி -கூட்டாம்புளி வழியாக ராமேஸ்வரத்திற்கு பஸ் வசதி வேண்டும்- கனிமொழி எம்.பி.யிடம் பொதுமக்கள் கோரிக்கை

    • கனிமொழி எம்.பியிடம் கூட்டாம்புளி பொது மக்கள் சார்பாக தி.மு.க. கிளைச் செயலாளரும் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளருமான பால்ராஜ் மனு கொடுத்தார்.
    • கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் சாயர்புரம் -கூட்டாம்புளி - தூத்துக்குடி-மதுரை இடையே தடம் எண் 153 எக்ஸ் எஸ் 1 என்கிற அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி யிடம் கூட்டாம்புளி பொது மக்கள் சார்பாக தி.மு.க. கிளைச் செயலாளரும் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளருமான பால்ராஜ் மனு கொடுத்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் சாயர்புரம் -கூட்டாம்புளி - தூத்துக்குடி-மதுரை இடையே தடம் எண் 153 எக்ஸ் எஸ் 1 என்கிற அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

    அந்த பேருந்து எங்கள் பகுதிக்கு நள்ளிரவில் வரும்படியாக இருந்தது.அதனால் வியாபாரிகள் மற்றும் வெளியூர் சென்று திரும்புவோருக்கு மிகவும் வசதியாக இருந்தது.

    அந்த பேரூந்தை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்திவிட்டனர். மிகவும் அவசியமான அந்த பேருந்தை இப்போது ஸ்ரீவைகுண்டம் - சாயர்புரம் - கூட்டாம் புளி -தூத்துக்குடி - ராமேஸ்வரம் இடையி லான பேருந்தாக வழித்தட மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

    ஸ்ரீவைகுண்டம் அல்லது சாத்தான்குளம் பணி மனையில் இருந்து காலையில் கிளம்பி சாயர்புரம் - தூத்துக்குடி -ராமநாடு வழியாக ராமேஸ்வரம் சென்று இரவில் திரும்ப வேண்டும்.காலையில் பேருந்தில் பயணிக்கும் எங்கள் பகுதி பக்தர்கள் ராமேஸ்வரம் கோவிலில் பூஜை முடிந்த பிறகு அங்கிருந்து இரவில் கிளம்பி வீடு திரும்பும்படி செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது பழைய மதுரை பேருந்து இல்லாத குறையை இந்த பேருந்து போக்கும் என்று நம்புகிறோம்.

    அதேபோல், திசையன் விளை பணிமனையில் இருந்து உவரி - திசையன்விளை - சாத்தான்குளம் - நாசரேத் - குரும்பூர்-ஏரல் -சாயர்புரம் - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள 145 எஸ்.எஸ்.எஸ் என்கிற பேருந்தை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி,பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    Next Story
    ×