என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரிசோதனை முகாம் நடந்தது.
மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்
- பொதுமக்களுக்கு எவ்வாறு புற்றுநோய் வருகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- முகாமில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இன்னர் வீல் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து முச்சந்தியில் அமைந்துள்ள எஸ்.எஸ் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை நடத்தியது.
முகாமை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவி டயானா சர்மிளா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் இந்த முகாமில் உடல் எடை, உயரம்,ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு,மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு நிபுணர்கள் கொண்டு அதிநவீன பிராஸ்டர் மூலம்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு புற்றுநோய் எவ்வாறு வருகிறது ,அதனை கட்டுப்படுத்தும் முறைகள், உணவு பழக்க வழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவர் ஹிரோஷா, மருத்துவர்கள் வெற்றிச்செல்வி, சித்து, மற்றும் இன்னர்வீல் சங்க தலைவர் கலைச்செல்வி சட்டநாதன் வரவேற்பு ரையாற்றினார் ரோட்டரி சங்கத் தலைவர் சுவாமிநாதன் இதில் இன்னருவில் சங்க செயலாளர் ரோட்டரி சங்க செயலாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






