என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த விநாயகர் கோவிலின் முன்புற தோற்றம்.
கோவில் பூட்டு உடைத்து உண்டியல் திருட்டு
- உண்டியல் காணாததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளி அக்ரஹாரம் வடக்கு தெருவில் மங்கள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். கடந்த ஜூன் மாதம் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் அடைக்கப்பட்டது. இதனை அறிந்து நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் கேட்டின் பூட்டை உடைத்தனர். பின்னர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை அப்படியே அலேக்காக தூக்கி கொண்டு தப்பி ஓடினர்.
இன்று காலை கோவிலின் கேட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டும், உண்டியல் காணாதது கண்டும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் உண்டியலை தூக்கி சென்றது அவர்களுக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உண்டியல் தூக்கி சென்றதால் அதில் எவ்வளவு பணம், நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட்டு நடந்த இந்த கோவிலில் ஏற்கனவே கடந்த மாதம் உண்டியல் உடைத்து பணம் ,நகை திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. தற்போது உண்டியலையே திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.