என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் உடல் மீட்பு: போலீசார் விசாரணை
- அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் எந்த பகுதியை சேர்ந்தவர், அவர் கொலை செய்யப்பட்டாரா?
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கிராமம் கீழ்பாதியில் வயல்வெளி பகுதியில் உள்ள வீரனார் கோவில் பின்புறம் உள்ள மரத்தில் 35 வயது மதிக்கத் தக்க வாலிபர் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் பொதுமக்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் மரத்தில் கயிற்றில் சடலமாக தொங்கிய வாலி பரின் உடலினை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் எந்த பகுதியை சேர்ந்தவர், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கருவேப்பிலங் குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






