என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜனதா.வினர் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து போராட்டம்
    X

    திருத்துறைப்பூண்டியில், பா.ஜனதா.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பா.ஜனதா.வினர் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து போராட்டம்

    • மாநில அரசுகளின் செயலை கண்டித்து போராட்டம்.
    • முடிவில் பட்டியல் அணி ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை சரியாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பும்மாநில அரசுகளின் செயலை கண்டித்து திருத்து றைப்பூண்டியில் பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணியினர் வேதாரண்யம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பட்டியல் அணி தலைவர் மாதவன் தலைமை தாங்கினார்.

    பா.ஜ.க நகர தலைவர் அய்யப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் ரஜினி கலைமணி, மா.துணை தலைவர்கள் ஆதிசிவக்குமார், சதா.சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் உதயகுமார் மற்றும் பட்டியல் அணி பொதுச்செயலாளர்கள் ராஜா, சுரேஷ்கண்ணன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பட்டியல் அணி ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×